5/16/2018 12:41:34 PM
சூப்பர் ஸ்டார்களையும் சூப்பர்ஸ்டாரினிகளையும் ரசிகர்கள் என்றைக்கும் மறப்பதில்லை. காலம் கடந்தும் அவர்களின் நினைவுகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். கோலிவுட்டில் மட்டுமல்ல ஹாலிவுட் சூப்பர் நட்சத்திரங்களுக்கும் இந்த ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கான ரசிகர் வட்டம் ஒரு குறிப்பிட்ட எல்லையோடு நிற்காமல் உலகம் முழுவதும் பரவிகிடக்கிறது. அதுபோல் புகழ்பெற்றிருந்தவர் ஹாலிவுட் நடிகை மார்காட் கிட்டர்(69). 1968ல் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆன மார்காட் கிட்டர், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 1978ல் வெளியான சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு இவர் உலகம் முழுவதும் பிரபலமானார். சூப்பர்மேன் அனைத்து பாகங்களிலும் மார்காட் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தி நெய்பர்ஹுட்’. கடந்த 2017ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
மார்காட் கிட்டர் நேற்று அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு காரணம்பற்றி தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுவரை படத்தில் நடித்து வந்த மார்காட் கிட்டர் மேலும் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது திடீர் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. மார்காட் உடலுக்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment