4/11/2018 2:09:11 PM
தி நேம்ஷேக், பார்ட்டிஷன், துள்சி, பிளாக்மைல் உள்ளிட்ட ஏராளமான இந்தி படங்களில் நடித்திருப்பதுடன் லைப் ஆப் பய் ஹாலிவுட் படத்திலும் நடித்திருப்பவர் இர்பான் கான். சமீபத்தில் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அரியவகை நோய் தாக்கி இருப்பதாக தெரிவித்த அவர் தனக்காக பிரார்த்திக்கும்படி ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பின்னர் தெரியவந்தது.
மும்பையில் சிகிச்சை பெற்று வந்தவர் பின்னர் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஆனால் அங்கிருந்து வரும் தகவல்கள் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது. இர்பான்கானுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. இதனால் சிகிச்சை தொடர்கிறது. இர்பான் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை நிலவரம்பற்றி கேட்டால் சரியான பதில் தர மறுக்கின்றனர்.
இர்பான் உடல்நலம் பெற நாங்கள் அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். அதிகபட்ச சிகிச்சையை டாக்டர்கள் இர்பானுக்கு அளித்தபிறகும் அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாக தெரிகிறது. பாலிவுட் திரையுலகினரும், இர்பான் எந்தவிதமான நோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதுபற்றி அறிய முயன்றும் உண்மை நிலவரம் தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment