பரதநாட்டிய கலைஞராக நடிக்கும் தமன்னா
29 மே, 2018 - 13:29 IST
ரொமான்டிக் நாயகியாக நடிப்பதில் இருந்து விலகி பர்பாமென்ஸ் நடிகையாக வேண்டும் என்பதில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார் தமன்னா. அந்த வகையில், தமிழில் சீனுராமசாமியின் கண்ணே கலைமானே படத்தில் நடித்து வரும் அவர், தெலுங்கில் குயின் ரீமேக், சைரா நரசிம்மரெட்டி ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.
சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடிக்கிறார் தமன்னா. ஏற்கனவே அவர் சிறப்பாக நடனமாடக்கூடியவர் என்றபோதும், இந்த படத்தில் அவரது கேரக்டர் முழுக்க முழுக்க பரதநாட்டியத்தை சார்ந்து உருவாகியிருப்பதால், ஒரு பரதநாட்டிய கலைஞரிடம் முறையான பயிற்சி எடுத்துள்ளாராம் தமன்னா.
இதுவரை சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிறதாம்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment