5/29/2018 4:49:14 PM
அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சன். இந்தியில் பிரபல நடிகராக உள்ளதுடன் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் குரு படத்தில் நடித்திருந்தார். அமிதாப்பச்சனுக்கு சுவேதா என்ற மகளும் இருக்கிறார். திரைப்படத்தில் சுவேதாவை நடிக்க வைக்க பலர் முயன்றனர். ஆனால் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் தந்தை அமிதாப்புடன் முதன்முறையாக விளம்பர படமொன்றில் நடித்துள்ளார் சுவேதா. இதுபற்றி அமிதாப்பச்சன் கூறியது: கேமராவுக்கு முன்பு நிற்கும்போது நாங்கள் (அமிதாப்-சுவேதா) இருவரும் அந்தந்த கதாபாத்திரங்களாகத்தான் மாறி இருப்போம். மற்ற நடிகர், நடிகைகளுடன் எப்படி காட்சி பற்றி விவாதித்து நடிப்பேனோ அதேபோல் சுவேதாவுடனும் விவாதித்தேன். அவர் முதன்முறையாக கேமரா முன் நடிக்க வந்திருக்கிறார். அதனால் சில அறிவுரைகளை நான் அவருக்கு கூறினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. அறிவுரை கூறும் அளவுக்கு எனக்கு திறமை கிடையாது.
எனது வீட்டில் என் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராயையும் சேர்த்து ஏற்கனவே 4 நடிகர்கள் இருக்கிறோம். 5வதாக இணைந்திருக்கிறார் உண்மையான நடிகை சுவேதா. இப்படி சொல்வதை அவர் (சுவேதா) ஏற்க மாட்டார், ஆனாலும் அவர் நல்ல நடிகை. மிமிக்ரி செய்வதில் திறமையானவர். எங்காவது சென்று ஏதாவது ஒரு சம்பவத்தை பார்த்தால் அதை அப்படியே மிமிக்ரி செய்துகாட்டுவார். சுவேதாவின் இணைய தள பக்கத்தை நான் ஆர்வமாக படிப்பேன். தற்போது அவர் பரதேசி டவர்ஸ் என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் ஒரு எழுத்தாளராக இருப்பதை எண்ணி பெருமை அடைகிறேன். தொடர்ந்து அவர் எழுத வேண்டும்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment