ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்து வருவது குறித்து பாபி சிம்ஹா, “வில்லனாக நடிப்பதை நிறுத்த வேண்டும் என நினைத்தேன். ஆனால், விஜய் சேதுபதி உடனான நட்பினால் ‘கருப்பன்’ படத்தில் நடித்தேன். அதற்கு பிறகு போதும் என்ற போது தான் ஹரி சார் கேட்டார். அப்போது கூட வில்லனாக நடிப்பதில்லை என்றேன். ஆனால், முழுக்கதையை படித்தவுடன் உடனே ஒப்புக் கொண்டேன். வழக்கமாக படங்களில் பார்க்கும் வில்லன் வேடம் போன்று எனது கதாபாத்திரம் இருக்காது. வித்தியாசமாக எனது கதாபாத்திரத்தை ஹரி சார் எழுதியிருக்கிறார். மூன்று கெட்டப்களில் நடித்திருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். ஜூன் மாதத்தில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் பங்கு பெறும் ஒரு பாடலைக் காட்சிப்படுத்த ஐரோப்பா செல்கிறது படக்குழு.
[ad_2]
Source link
No comments:
Post a Comment