அடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷனின் பெயர் என்னவாக இருக்கும்? #Android - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 29, 2018

அடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷனின் பெயர் என்னவாக இருக்கும்? #Android

[ad_1]





ஆண்ட்ராய்டு



 




ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனை இன்னும் சில மாதங்கில் வெளியிடப் போகிறது கூகுள். ஆண்ட்ராய்ட் வெளியீட்டின் சிறப்பம்சமே கூகுள் அதற்கு வைக்கக் கூடிய பெயர் தான். எப்போதும் ஏதாவது உணவுப் பொருளின் பெயரைத்தான் தன் அப்டேட் வெர்ஷனுக்கு வைப்பது கூகுளின் வழக்கம். கப் கேக்கில் ( Cup cake) தொடங்கிய இந்த பெயர் வைக்கும் படலம் ஓரியோவில் (Oreo) வந்து நிற்கிறது. அடுத்ததாக வரப்போகும் வெர்ஷனின் பெயர் ‘P’ ல் தான் தொடங்கும். ஆனால், என்ன பெயராக இருக்கும். ‘P’ ல் தொடங்குகிற உணவுப் பொருட்கள் என்னென்ன இருக்கிறது எனப் பார்த்து விடலாம்.



பாப்ஸிகிள் (Popsicle):

வடக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஐஸ் பாப் வகை உணவுப் பொருள் பாப்ஸிகிள். இனிப்பான திரவத்தைக் குச்சியுடன் சேர்த்து ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால் ரெடி. இந்த வெர்ஷன் அப்டேட் வரப்போவது கோடைக்காலம் என்பதால் வாடிக்கையாளர்களைக் குளிர்விக்க இந்தப் பெயரை வைத்தாலும் வைக்கலாம்.



புட்டிங் ( Pudding):

இது ஒரு திடமும் அல்லாத திரவமும் அல்லாத நம்ம ஊர் அம்மாக்கள் குழந்தைகளை சாப்பிடக் கூடாது எனச் சொல்கிற ஓர் உணவுப் பொருள், சுருக்கமா சொல்லனும்னா ‘ஜெல்லி’. இதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருந்தாலும் பொதுவாக புட்டிங் என்றால் இனிப்பான பொருள் என்று அர்த்தம். குறிப்பிட்ட எந்த ஒரு உணவுக்கும் புட்டிங் என்ற பெயர் கிடையாது.



பை (Pie):

பை என்றால் இனிப்பான பொருட்களைக் கொண்டு அடைக்கப்பட்ட, வார்க்கப்பட்ட பிஸ்கட் எனலாம். ‘பை’யில் நிறைய வகைகள் உண்டு, அது அடைக்கப்படும் பொருளை வைத்து பெயர் மாறுபடும் ஸ்வீட் பை, சாக்கோ பை என்று. எப்பவுமே பெரிய பெரிய பெயரா வைக்கிறோமே என்று இந்தக் குட்டி பெயரை கூகுள் தேர்ந்தெடுத்தாலும் எடுக்கலாம்.



போக்கி (Pocky):

போக்கா என்பது ஜப்பானைச் சேர்ந்த ஒரு வகை தின்பண்டம். ஒரு குச்சி வடிவிலான பிஸ்கட்டில் முக்கால்வாசி சாக்லேட்டில் முக்கி எடுத்தால் போக்கி தயார். பார்ப்பதற்கு நம்ம ஊர் ஊதுவத்தி போன்றே இருக்கும். கிட்கேட், ஓரியோ என பிரபல தின்பண்டங்களின் பெயரை வைத்தது போல இந்தப் பெயரை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால் இது ஜப்பானில் எரிமலையை விடவும் போக்கி ஃபேமஸ்.



பேர்ஃபெயிட் ( Parfait):

 இதுவும் ஒரு வகை இனிப்பு வகை தான்.  பிரான்ஸ் நாட்டைத் தாயகமாக கொண்ட இந்த உணவுப் பொருளைப் பற்றி சொல்லனும்னா ‘நம்ம ஊர் ஃபலூடா, பிரான்ஸூல பேர்ஃபெயிட்’. பிரான்ஸ் மட்டுமல்லாது, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் உண்டு என்றாலும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி. ஐஸ்கிரீம், சர்க்கரை, ஸிரப், முந்திரி, பாதாம் (எச்சில் ஊறுது பாருங்க, தொடச்சிக்கோங்க) போன்றவை பிரதான மூலப் பொருட்கள்.

              

என்னப்பா, அமெரிக்க, ஜப்பான், பிரான்ஸ்னு எல்லா ஊர் பேரையும் சொல்லுற. நம்ம ஊர் தின்பண்டம் ஏதும் லிஸ்ட்ல இல்லையா என கேட்கிறீர்களா. நம்ம ஊர் இனிப்பு பேர் என்ன இருக்கு? ம்ம்ம் ‘பாயசம்’ னு வைக்கலாமே. சுந்தர் பிச்சை தமிழர் என்பதாலும் அவர் தான் கூகுளின் சிஇஓ என்பதாலும் பாயசம் என்ற பேரை வைக்க வலியுறுத்தி ஒரு மெயில் பண்ணலாம்தான்!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages