​4000ஜிபி இன்டர்நெல் மெமரியுடன் அதிரடியாக களமிறங்கும் Lenovo Z5! | Lenovo z5 waiting for launch with 4000GB intenal memory! - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 21, 2018

​4000ஜிபி இன்டர்நெல் மெமரியுடன் அதிரடியாக களமிறங்கும் Lenovo Z5! | Lenovo z5 waiting for launch with 4000GB intenal memory!

[ad_1]


ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே முதன்முதலாக 4000ஜிபி இன்டர்நெல் மெமரி உடன் Lenovo Z5 அறிமுகமாக உள்ளது.

ஏற்கனவே full-screen ஸ்மார்ட்போனாக Lenovo Z5 வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் சாங் செங் இந்த ஸ்மார்ட்போன் குறித்த அடுத்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதாவது இந்த Lenovo Z5 ஸ்மார்ட்போன் நினைத்துப் பார்க்க முடியாதபடி மிகவும் அதிகப்படியான இன்டர்நெல் மெமரியாக 4டிபி உடன் வெளிவரவுள்ளது என்று அறிவித்துள்ளார். இந்த வசதியின் மூலம் Lenovo Z5 ஸ்மார்ட்போனில் ஒரு மில்லியன் போட்டோக்கள் , 2000 HD படங்கள் மற்றும் 1,50,000 இசைக்கோப்புகளையும்  சேமித்துக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

சமீபத்தில் வெளியாகிவரும் பெரும்பாலான அதிக பட்ச வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் கூட 128ஜிபி அல்லது 256ஜிபி தான் அதிகபட்ச இன்டர்நெல் மெமரியாக உள்ளது. ஆனால் Lenovo Z5 அதிரடியாக 4000ஜிபி வரை இன்டர்நெல் மெமரியை அதிகரித்திருப்பது மற்ற நிறுவனங்களுக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில் அறிமுகமாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அதிக இன்டர்நெல் மெமரியுடனேயே வெளியாக வாய்ப்புள்ளது. 

மேலும் full-screen ஸ்மார்ட்போனான இந்த Lenovo Z5ல் 95% டிஸ்பிலே மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி ஸ்பீக்கர்கள் மற்றும் கேமராக்களுக்கான சிறுஇடைவெளிகள்  கூட நீக்கப்பட்டு வேறுவிதமாக புது தொழில்நுட்பத்தில் புது வடிவத்தில் இது வெளியாக உள்ளது. ஃப்ரண்ட் கேமராவானது பாப் அப் மெனுவில் வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி  Lenovo Z5 உருவாக்கத்தில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் 4 மாற்றங்களை செய்து அதில்வெற்றி கண்டுள்ளதாகவும், 18 காப்புரிமை பெற்ற புதிய தொழில்நுட்பங்களை சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஜூன் 14ம் தேதி சீனாவில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறித்த புதிய தகவல்கள் வெளியீட்டிற்கு முன்பாக அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages