தந்தையின் எதிர்ப்பை மீறி நடிகையாக முயற்சிக்கும் மகள் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 21, 2018

தந்தையின் எதிர்ப்பை மீறி நடிகையாக முயற்சிக்கும் மகள்

[ad_1]




தந்தையின் எதிர்ப்பை மீறி நடிகையாக முயற்சிக்கும் மகள்
5/21/2018 3:03:43 PM

கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன், அனில் கபூர் மகள் சோனம் கபூர் போன்றவர்கள் நடிகைகளாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு சில நடிகர்களின் மகள்கள் நடிப்பு பக்கம் தலைகாட்டாமல் ஒதுங்கியிருக்கின்றனர். பாலிவுட் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் சஞ்சய் தத். இவருக்கு மொத்தம் 3 மனைவிகள். முதல் மனைவி ரிச்சா சர்மாவின் மகள் த்ரிஷ்லா தத். இவருக்கு நடிப்பின் மீது கொள்ளை ஆசை. ஆனால் நடிக்க வரக்கூடாது என்று சஞ்சய் தத் தடைவிதித்திருக்கிறார். ஆனாலும் த்ரிஷ்லாவை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நடிக்க வராமல் ஒதுங்கியிக்கும் த்ரிஷ்லா படிப்பதற்காக நியூயார்க் சென்று தங்கியிருக்கிறார். அவ்வப்போது இணைய தள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு தந்தை சஞ்சய் தத்தை கடுப்பேற்றி வருகிறார்.

சமீபத்தில் த்ரிஷ்லா நட்சத்திர ஓட்டலின் மொட்டை மாடியில் இருக்கும் நீச்சல் குளம் அருகே டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து போஸ் அளித்த த்ரிஷ்லா, பிறகு அந்த படத்தை இணைய தளத்தில் வெளியிட்டார். த்ரிஷ்லாவின் கவர்ச்சி படத்தை பார்த்த சஞ்சத் தத் கோபம் அடைந்தார். ஆனால் திரைப்பட துறையினர் ஹீரோயின் ஆவதற்கான உடற் கட்டு த்ரிஷ்லாவுக்கு இருப்பதாக கமென்ட் வெளியிட்டுள்ளனர். சஞ்சய் தத்தின் 2வது மனைவி ரெஹியா பிள்ளை, த்ரிஷ்லாவின் நீச்சல் உடை படத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டு வாவ் என கமென்ட் பகிர்ந்திருக்கிறார். தற்போது சஞ்சய் தத் தனது 3வது மனைவி மன்யதா தத் உடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். த்ரிஷ்லா நடிகை ஆவதற்கு சஞ்சய்தத் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதையும் மீறி த்ரிஷ்லாவுக்கு படங்களில் நடிக்க அழைப்பு வருவதால் நடிக்க வருவதற்கான எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் தங்கி படித்து வரும் த்ரிஷ்லா விரைவில் மும்பை திரும்ப உள்ளார். அப்போது நடிப்பதுபற்றி முடிவு செய்ய உள்ளாராம்.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages