2.0 - வெளியீடு நிலவரம் என்ன ? - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 30, 2018

2.0 - வெளியீடு நிலவரம் என்ன ?

[ad_1]


2.0 - வெளியீடு நிலவரம் என்ன ?



30 மே, 2018 - 15:13 IST






எழுத்தின் அளவு:






What-is-the-status-of-2pointo?


ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் '2.0'. இப்படம் பற்றிய தகவல்களை ஏற்கெனவே அறிவித்தபடி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து எந்தவிதமான அறிவிப்புகளையும் வெளியிடுவதில்லை.

2015ல் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. அக்டோபர் 2017ல் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. முதலில் இப்படத்தை 2017 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டார்கள். அதன் பின் 25 ஜனவரி 2018ல் வெளியிடுவதாக அறிவித்தார்கள். பின்னர் அதையும் மாற்றி ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றார்கள். ஆனால், ஏப்ரல் கடந்து மே முடிவடைய உள்ளது, இன்னும் '2.0' எப்போது வெளியாகும் என்று எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்கள்.

படத்தில் முதல் பார்வை வெளியீடு மும்பையிலும், இசை வெளியீடு துபாயிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2017 நவம்பர் மாதம் டீசரும், 2017 டிசம்பர் மாதம் டிரைலரும் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், அவை வெளியிடப்படவில்லை. அதற்குப் பிறகு எப்போது வெளியிடப்படும் என்று கூட முறையான அறிவிப்பு செய்யவில்லை. ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு பற்றிய அறிவிப்புகளைக் கூட சரிவர செய்ய முடியாத நிலையில் ஏன் உள்ளார்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை.

சர்வதேச அளவில் உருவாக்கப்படும் ஒரு படத்தைப் பற்றிய விவரங்களை புரொபஷனலாக அறிவிப்பதில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. 'பாகுபலி' படத்திற்கு அவ்வப்போது சரியான அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்கள். அந்தப் படத்தை விட அதிக வசூலைப் பெற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் '2.0' படத்திற்கு அந்த தொழில்முறை அக்கறை ஏன் இல்லை என்பது ரஜினி ரசிகர்களின் கேள்வியாகவும் உள்ளது.

ஆகஸ்ட் 15க்கு வருமா அல்லது தீபாவளிக்கு வருமா இல்லை 2019 பொங்கலுக்கு வருமா என தயாரிப்பு நிறுவனம் இனிமேலாவது அறிவிக்கும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages