3/13/2018 3:51:35 PM
அடிக்கடி தமிழ்ப் படங்களில் பார்க்கக்கூடிய கதை. குடும்பத்தைச் சீரழித்த கும்பலைப் பழிவாங்குகிற ஹீரோவின் அரதப்பழசான கதை என்றாலும், படத்தின் திரைக்கதையும், அதைக் காட்சிப்படுத்திய விதமும் புதிது. அன்பான மனைவி (எலிசபெத் ஷ்யூ), அழகான மகள் (கேமிலா மோரான்) ஆகியோருடன் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார், டாக்டரான ப்ரூஸ் வில்ஸ். ஒருபுறம் அவர் அமைதியாக வாழ்ந்தாலும், மறுபுறம் ஒரு பயங்கரமான கொள்ளைக் கும்பல், ஆண்கள் இல்லாத வீடுகளில் புகுந்து கொள்ளை, கொலை என தாண்டவமாடுகிறது. ஒருநாள் ப்ரூஸ் வில்ஸ் வீட்டில் இல்லாத நேரத்தில், அவர் வீட்டுக்குள்ளும் இந்தக் கும்பல் புகுந்துவிடுகிறது. வீட்டில் இருக்கும் நகை, பணம் அனைத்தையும் அள்ளிக்கொடுத்தும் திருப்தி அடையாத கும்பல், ப்ரூஸ் வில்சினுடைய மனைவியைக் கொல்கிறது. தாயைக் காப்பாற்றச் சென்ற கேமிலாவைக் கும்பல் தாக்கியதில் அடிபட்டு, கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார்.
வழக்கமான போலீஸ் சம்பிரதாயங்கள் ஒருபுறம் நடந்தாலும், ப்ரூஸ் வில்ஸ் ஆபரேஷன் தியேட்டரை மறந்துவிட்டு ஆக்ஷன் களத்தில் இறங்குகிறார்.
தனது குடும்பத்தை நாசமாக்கியவன் யார் என்று தெரியாமல், கண்ணில் படும் கொள்ளையர்களை எல்லாம் சுட்டுத்தள்ளுகிறார். கடைசியாக தன்னுடைய குடும்பத்தை நாசமாக்கியவர்களைப் பற்றி அவருக்குத் தெரிகிறது. அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். தனியொருவனாக அவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பது மீதி கதை. டைஹார்ட், ரெட், தி சிக்ஸ் சென்ஸ், ஹாஸ்டேஜ் ஆகிய படங்களில் ஆக்ஷனில் அதகளம் செய்த ப்ரூஸ் வில்ஸ், இதில் ஆக்ஷனுடன் சென்டிமென்ட்டிலும் கலக்கியிருக்கிறார். ஆனால், அவரது முந்தைய படங்களை ஒப்பிடும்போது, இதில் ஆக்ஷன் குறைவுதான். ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கும் இடையே மிக நீண்ட இடைவெளி இருப்பதால், சலிப்பு ஏற்படுகிறது. பொதுவாக இதுபோன்ற படங்களில், வில்லன்கள் பவர்ஃபுல்லாக இருப்பார்கள். ஆனால், இதில் வீக்காக இருக்கிறார். என்றாலும், தமிழ்ப் படங்களின் பாணியில் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வைத் தருகிறார், இயக்குனர் எலி ரோத்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment