ரஜினி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் இன்று! - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 29, 2018

ரஜினி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் இன்று!

[ad_1]


இன்று ‘காலா’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் மட்டுமல்ல, ரஜினி ரசிகர்களால் மறக்க முடியாத நாளும் கூட.

ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு எப்போது வருவார் என எதிர்பார்த்து ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. ரஜினி நடித்த படம் எப்போது ரிலீஸாகும், அவருக்கு கட் அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்யலாம் என வெறித்தனமாகக் காத்துக் கிடக்கின்றனர் ரசிகர்கள்.

அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு, இன்று முக்கியமான நாள். 7 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் ரஜினிகாந்த். தீவிர சிகிச்சைக்குப் பிறகும், பலரின் வேண்டுதல்களுக்குப் பிறகும் ஆரோக்கியத்துடன் மீண்டு வந்தார் ரஜினிகாந்த். எனவே, இந்த நாளை ரஜினி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.



 

“28 மே 2011 - இந்த நாளை என்னால் எப்போதும் மறக்க முடியாது. இந்த நாளில்தான் அப்பாவை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றோம். கடவுளின் அருளால் அவர் உடல்நலம் தேறி, ஆரோக்கியத்துடன் திரும்பி வந்தார். உங்கள் அனைவரின் வேண்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா.

இந்த நாள், ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முக்கியமான நாளாக அமையப் போகிறது. ரஜினி நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீஸாக இருக்கிறது. எனவே, ரஜினி ரசிகர்களுக்கு சோகம், மகிழ்ச்சி என இரண்டும் கலந்த நாளாக இந்த தேதி அமைந்துவிட்டது.

திட்டமிட்டு கலவரமாக மாற்றி, சுட்டுக் கொன்றார்கள்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பா.இரஞ்சித்




 


[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages