ஐபிஎல் இறுதிப் போட்டி மும்பையில் நடந்தும் நேரில் பார்க்க ஏன் வரவில்லை? சச்சின் விளக்கம் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 30, 2018

ஐபிஎல் இறுதிப் போட்டி மும்பையில் நடந்தும் நேரில் பார்க்க ஏன் வரவில்லை? சச்சின் விளக்கம்

[ad_1]


ஐபிஎல் 2018 இறுதிப் போட்டி தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை நேரில் பார்க்க வந்தவர்களில் முக்கியப் பிரபலம் சச்சின் டெண்டுல்கர் இல்லை.

மும்பையில் நடந்த லீக் போட்டிகள் அனைத்தையும் நேரில் வந்து பார்த்த சச்சின் டெண்டுல்கர் இறுதிப் போட்டிக்கு நேரில் வராதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ‘

மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறாமல் வெளியேறியதால் ஏமாற்றமடைந்தாரா என்ற கேள்வி இருந்தது.

இந்நிலையில் சச்சின் தன் ட்விட்டர் பக்கத்தில் அதற்கெல்லாம் பதிலளிக்குமாறு பதிவிட்டதாவது:

“ஐபிஎல் மிகப்பெரிய அளவில் நிறைவுற்றது. சிஎஸ்கே, சன் ரைசர்ஸ் இடையே ஒரு கிரேட் பைனல். ஆனால் நான் லதாமங்கேஷ்கருடன் இந்தப் போட்டியை அவரது இடத்திலிருந்து பார்த்தேன். இது இன்னும் சிறப்பாக அமைந்தது” என்று லதா மங்கேஷ்கருடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முந்தைய மே 27ம் தேதி ட்வீட்டில் “ஹார்ட் லக் சன் ரைசர்ஸ். நீங்கள் உண்மையில் நன்றாக விளையாடினீர்கள். தரமான அணியாக ஆடினீர்கள். இறுதிக்குள் நுழைவதற்கு முழுதும் தகுதியுடைய அணிதான் உங்களுடையது, உங்கள் தலையை கர்வத்துடன் நீங்கள் நிமிர்த்தலாம்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages