”குறைந்த டேட்டா... நல்ல பெர்ஃபார்மென்ஸ்... ஆனால் கேமரா?” - பட்ஜெட் விலையில் நோக்கியா #Nokia1 - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 28, 2018

”குறைந்த டேட்டா... நல்ல பெர்ஃபார்மென்ஸ்... ஆனால் கேமரா?” - பட்ஜெட் விலையில் நோக்கியா #Nokia1

[ad_1]





சந்தையில் தொடர்ச்சியாக மொபைல்களை அறிமுகப்படுத்தி வரும் நோக்கியா தனது பார்வையை பட்ஜெட் செக்மென்ட் பக்கம் திருப்பியிருக்கிறது. மீடியம் பட்ஜெட் மற்றும் பிளாக்ஷிப்  செக்மென்ட்டில் பல மொபைல்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் பட்ஜெட் செக்மென்ட்டில் அவ்வளவாக மொபைல்களை அறிமுகப்படுத்தவில்லை நோக்கியா. இந்நிலையில் கடந்த மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற  MWC 2018 மாநாட்டில் வெளியிடப்பட்ட நோக்கியா 1 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 



நோக்கியா 1




நோக்கியா 1



ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தொடக்கத்தில் வெளியானபோது இருந்ததைப் போன்று  தோற்றமளிக்கிறது இந்த மொபைல். தோற்றம் மட்டுமல்ல இதில் இருக்கும் வசதிகளும் அப்படித்தான் இருக்கின்றன. இதில் 4.5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் இதை விடப் பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இருக்கின்றன. அடுத்தது ப்ராஸசர் மற்றும் ரேம் 1.1  GHz மீடியாடெக்   MT6737M ப்ராஸசர் ஓகேவாக இருந்தாலும் 1 ஜிபி ரேம்  என்பது ரொம்பவே குறைவுதான்.  8 ஜிபி இன்டெர்னல் மெமரியை மெமரி கார்டு மூலமாக 128 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ள முடியும்.



நோக்கியா



இப்பொழுதெல்லாம் மொபல்களில் குறைந்தபட்ச கேமராவே 8  MP என்று இருக்க  நோக்கியா 1-ல் கொடுக்கப்பட்டிருப்பது வெறும் 5  MP தான். முன்புறமாக 2MP கேமரா இருக்கிறது. இரண்டு கேமராக்களிலுமே ஆட்டோ ஃபோகஸ் வசதி இல்லை. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தின் Go என்ற பதிப்பு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. Go பதிப்பு இயங்குதளத்துடன் இந்தியாவில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இது. இந்த வகை இயங்குதளத்தைக் குறைவான ரேம் மற்றும் இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்காக உருவாக்கியிருக்கிறது கூகுள். இந்த இயங்குதளம் வேகமாகச் செயல்படுவதுடன் டேட்டாவையும் குறைவாகவே செலவு செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் மூலமாக மொபைலுக்கு உடனுக்குடன் சாப்ட்வேர் அப்டேட்களும் கிடைக்கும். தற்போது சந்தையில் வெளியாகும் பெரும்பாலான மொபைல்கள் நான்-ரிமூவபிள் பேட்டரியைத்தான் கொண்டிருக்கின்றன. ஆனால் இதில் 2150  mAh பேட்டரி ரிமூவபிள் பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்புற கவரை மாற்றிக்கொள்ள முடியும் அதற்காக வேறு நிறங்களில் கவர்களை விற்பனை செய்கிறது நோக்கியா. வசதிகளை அப்டேட் செய்ய மறந்தாலும் நெட்வொர்க்கை மறக்கவில்லை நோக்கியா.  இந்த மொபைலில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும், 4 G VoLTE வசதியும் இருக்கிறது. 



நோக்கியா 1





ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் சாதாரண மொபைல்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.3 பில்லியன். அதில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள். அவர்களை மையமாக வைத்தும் அவர்களது தேவைகளுக்குத் தகுந்தவாறும் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண  மொபைல்களை பயன்படுத்துவோர் ஸ்மார்ட்போனுக்கு மாற விரும்பினார்கள் என்றால் அவர்களுக்கு நோக்கியா 1 ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும் என நோக்கியா தெரிவித்திருக்கிறது. இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் 5499 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலுக்கு 2,200 ரூபாய் கேஷ்பேக் ஆபரை அளிக்கிறது ஜியோ. பட்ஜெட் மொபைல் என்பதால் இதில் அடிப்படை வசதிகளே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த செக்மென்ட்டைப் பொறுத்தவரையில் பெரும்பாலானோர் வாங்க விரும்புவது ரெட்மி ஸ்மார்ட்போன்களைத்தான். அந்த அளவிற்கு வசதிகள் இதில் இல்லாவிட்டாலும் குறைந்த விலையில் ஒரு நல்ல மொபைலை வாங்க விரும்புபவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages