​மீனவர்களுக்கு உதவும் புதிய கண்டுபிடிப்பு! | new invention helpful to fishermen - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

​மீனவர்களுக்கு உதவும் புதிய கண்டுபிடிப்பு! | new invention helpful to fishermen

[ad_1]


இயற்கை சீற்றங்களின்போது நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களுக்கு உதவும் வகையில், புதிய கருவி ஒன்றினை கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். 

திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை மாணவிகள் இந்த கருவியை உருவாக்கியுள்ளனர். வயர்லெஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த GPRS கருவி சுமார் 25 கிமீ தூரம் வரை ஒருவித மின் அலையை உருவாக்கும் என்றும், இதனைத் தாண்டி மீனவர்கள் செல்லும்போது ஒரு அபாய ஓலியை எழுப்பி பாதுகாப்பு எல்லையை கடப்பதை உணர்த்தும் என்றும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், கடலுக்குள் மீனவர்கள் ஆபத்தில் இருப்பதை கரையில் உள்ளவர்களுக்கு இந்த கருவி உணர்த்தும் என்றும், அருகில் உள்ள மீனவர்களுக்கும் இந்த தகவல் செல்லும் என்றும் மாணவிகள் கூறியுள்ளனர். 

இந்த கருவியை குறைந்த விலையில் 3 ஆயிரம் ரூபாயில் தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ள மாணவிகள், தமிழக மீன் வளத்துறை தங்களது இந்த புதிய தொழில் நுட்ப கருவியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages