4/16/2018 2:33:22 PM
தென்னிந்திய ஹீரோ, இயக்குனர்கள் பற்றி சமீபத்தில் பரபரப்பான பாலியல் தொல்லை புகார் கூறி சர்ச்சையில் சிக்கியவர் ராதிகா ஆப்தே. தவிர டூ பீஸ், டாப் லெஸ் கவர்ச்சி படங்கள் வெளியிட்டும் இணைய தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபகாலமாக வில்லங்கத்தில் சிக்கிவந்தவர் தற்போது மாறுபட்ட களத்துக்குள் பிரவேசித்திருக்கிறார். இரண்டாம் உலகப்போர் பற்றிய ஹாலிவுட் படம் உருவாகிறது. இதில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ராதிகா ஆப்தே. ராதிகா ஆப்தேவுடன் இணைந்து ஹாலிவுட் நடிகைகள் சாட்னா கடிக், சாரா மேகன் தாமஸ் நடிக்கின்றனர்.
நூர் இனியாத் கான் என்ற உளவாளி (ஸ்பை) பாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் சாட்னா கடிக், 2ம் உலகப்போர் குறித்து ரகசிய தகவல்களை உளவுபார்ப்பதற்காக ராதிகா ஆப்தே, சாரா மேகன் ஆகியோரை அனுப்பி வைக்கிறார். அதன்பின்னணியில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
[ad_2]
Source link
No comments:
Post a Comment