12/29/2017 4:01:34 PM
ஜாய் ஜான்ஸ்டன் இயக்கத்தில், 1995ம் ஆண்டு வெளியாகி வசூலில் கலக்கிய ஹாலிவுட் படம் ஜுமான்ஜி. இப்போது ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள் உருவாகியுள்ளது. இன்று இப்படம் தமிழிலும் வெளியாகிறது. டெவய்ன் ஜான்சன், அலெக்ஸ் ஒல்ப், ஜாக் பிளாஸ், மடிசன் ஐமேன், கேவின் ஹார்ட் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு பள்ளியில், சில மாணவர்கள், சுத்தப்பணியில் ஈடுபடும் போது, ஓர் அறையில் ஜுமான்ஜி என்கிற ஒரு வீடியோ கேமின் வழியாக ஒரு காட்டுப் பகுதியைச் சென்றடைகின்றனர். அக்காட்டினில் அவர்களது அனுபவங்களும் அவற்றின் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் படிப்பினைகளுமே படத்தின் சாரம். இருபது வருடங்களுக்கு முன்னர் வெளியாகிய ஜுமான்ஜி படத்தில் ஒரு விளையாட்டும், அதை விளையாடுபவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களுமே அடிப்படை. அந்த விளையாட்டு, இதில் ஒரு வீடியோ கேமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்விளையாட்டில் ஈடுபட்டவர்கள் இறுதி வரை பங்கேற்க வேண்டும். அதுவே விளையாட்டின் விதிமுறை. இதை திரில்லாக படம் சொல்கிறது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment