5/21/2018 10:41:46 AM
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்ஸி இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு தென்னிந்திய படங்கள் பக்கம் தலைகாட்டுவதில்லை. இந்தி திரையுலகம் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு அமிதாப்பச்சனுடன் இணைந்து பிங்க் படத்தில் நடித்தார். இப்படம் ஹிட்டானது. இதில் இடம்பெற்ற கோர்ட் காட்சி ஹைலைட்டாக பேசப்பட்டது. இதையடுத்து மீண்டும் அமிதாப் நடிக்கும் படத்தில் டாப்ஸி நடிக்கிறார். ‘பேட்லா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுஜாய் கோஷ் இயக்குகிறார். கிரைம் த்ரில்லராக உருவாகவிருக்கும் இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது. சுஜாய் கோஷ் ஏற்கனவே வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் 2ம் பாகத்தையும் இயக்கியதுடன் மேலும் பல படங்கள் இயக்கி உள்ளார். அமிதாப், டாப்ஸி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஸ்காட்லாந்து, லண்டன் போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment