ஆப்பிரிக்காவின் ஜூலியா ராபர்ட்ஸ்! - Dinakaran Cinema News - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 30, 2018

ஆப்பிரிக்காவின் ஜூலியா ராபர்ட்ஸ்! - Dinakaran Cinema News

[ad_1]




ஆப்பிரிக்காவின் ஜூலியா ராபர்ட்ஸ்!
4/10/2018 5:25:25 PM

உலகில் ஹாலிவுட் மற்றும் இந்தியத் திரையுலகத்துக்குப் பிறகு அதிக செல்வாக்குஉடைய சினிமா இண்டஸ்ட்ரி நோலிவுட் எனப்படும் நைஜீரிய திரைப்படத்துறை. வருடத்துக்கு சராசரியாக இரண்டாயிரம் படங்கள் இங்கே தயாராகின்றன. ஆப்பிரிக்காவில் திரையரங்குகள் மிகவும் குறைவு என்பதால் அங்கே சினிமா என்பது ஹோம் வீடியோ எனப்படும் டிவிடி வடிவத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. ஒரு படம் ரிலீஸ் ஆனதுமே, முதல் நாளே ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் டிவிடிக்கள் விற்பனை ஆகின்றன. படுமொக்கைப் படமே கூட குறைந்தது ஐம்பதாயிரம் பிரதிகள் விற்குமாம்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நோலிவுட்டின் ராணியாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் முப்பத்தி ஆறு வயதான ஜெனெவீவ் நாஜ்ஜி. 2002ல் ‘ஷரோன் ஸ்டோன்’ என்கிற படத்தில் நடித்தபோது வெளியான இவரது படங்கள் ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் கவர்ச்சியில் கலங்கடித்தன. ஆப்பிரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான ரசிகர்களை இவருக்கு பெற்றுத் தந்தன. 2005ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ‘ஆப்பிரிக்கா மூவி அகாடமி’ விருதினை வென்றவர். நைஜீரியாவின் இமோ மாகாணத்தில் 1979ல் பிறந்தவர் நாஜ்ஜி. எட்டு குழந்தைகளில் இவர் நான்காவது.

கத்தோலிக்க மத மரபில் வந்த நடுத்தரக் குடும்பம். அப்பா, வங்கிப் பணியாளர். அம்மா, ஸ்கூல் டீச்சர். சினிமா பற்றியெல்லாம் பெரிய ஐடியா இல்லாத குடும்பம். எட்டு வயதில் குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சித் திரையில் தோன்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அப்போதும் கூட எதிர்காலம் சினிமா என்று இவர்கள் நினைத்ததில்லை. நாஜ்ஜி மீண்டும் வழக்கம்போல பள்ளிக்கு படிக்கப் போய்விட்டார். பள்ளிப் படிப்பு முடிந்து லாகோஸ் பல்கலைக்கழகத்தில் சேரும்போதுதான் திடீர் திருப்பம். ஒரு பேருந்துப் பயணத்தில் ஒருவர் இவரை அடையாளம் கண்டுகொண்டார்.பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த டிவி நிகழ்ச்சியில் தோன்றிய பெண் நீதானே? என்று கேட்டார்.

மீண்டும் கலைத்துறைக்கு வரவேண்டும் என்கிற ஆவல், அந்தக் கேள்வியின் மூலம்தான் அவருக்கு வந்தது. நாம் வாழ்க்கையில் சந்தித்திருக்க வாய்ப்பே இராத ஒரு நபர், நம்மைக் கண்டதுமே அடையாளம் கண்டுகொள்வது எத்தகைய புகழ் போதையைத் தரும் என்பது அனுபவித்தால்தான் தெரியும் என்று பிற்பாடு இச்சம்பவத்தைச் சொன்னார் நாஜ்ஜி.நாஜ்ஜி, சாதாரணமான ஆப்பிரிக்கப் பெண் தோற்றம் கொண்டவர்தான். ஆனால்- சினிமாவில் நடிக்கிறோம் என்கிற எண்ணமில்லாத இயல்பான நடிப்புதான் இவரை மற்ற நடிகைகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. 2004ஆம் ஆண்டு ‘லக்ஸ்’ நிறுவனம், ஆப்பிரிக்காவின் முகம் யார் என்றொரு கணக்கெடுப்பை கண்டம் முழுக்க நடத்தியது.  பெரும்பாலானவர்கள் நாஜ்ஜிக்குத்தான் ஓட்டளித்தார்கள்.

ஏஞ்சலினா ஜோலிதான் அவருக்கு மிகவும் பிடித்த நடிகை என்று பல்வேறு பேட்டிகளில் அவர் சொல்லிக் கொண்டாலும், ‘ஆப்பிரிக்காவின் ஜூலியா ராபர்ட்ஸ்’ என்று அமெரிக்க ஊடகங்கள் இவரைப் புகழ்கின்றன. இதுவரை சுமார் நூறு படங்கள் நடித்திருக்கும் நாஜ்ஜி, ஒரு படத்துக்கு ஏழாயிரம் டாலர் வரை சம்பளமாகப் பெறுவதாகச் சொல்கிறார்கள். அந்த ஊரில் இத்தொகை ஒரு சூப்பர் ஸ்டாருக்கு வழங்கப்படும் ஊதியம். இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகம்தான் என்று எனக்கு எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. திடீரென்று ஒரு நாள் எல்லாமே முடிந்துவிடும் என்று கருதுகிறேன். அப்போது சட்டம் படிக்கப் போய்விடுவேன் என்று இயல்பாகச் சொல்கிறார்.இந்த வெற்றிக் கதையெல்லாம் சராசரியாக எல்லா நடிகைகளுக்கும் இருக்கும் கதைதான்.

நாஜ்ஜி, வேறுபடுவது அவரது குடும்ப வாழ்க்கையின் காரணமாகத்தான்.சில காலம் முன்பாகத்தான் திடீரென்று ஊடகங்கள் கண்டுபிடித்தன, நாஜ்ஜிக்கு ஒரு டீனேஜ் மகள் இருக்கிறாள் என்று. கனவுக் கன்னியாகத் திகழுபவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்பதையே கோடிக்கணக்கான ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுவும் பதினேழு, பதினெட்டு வயதில் ஒரு மகளும் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே மனம் நொந்து விட்டார்கள்.நாஜ்ஜியிடம் கேட்டார்கள்.

உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?

ஆமாம்
ஏன் முன்பே சொல்லவில்லை?
நீங்கள் யாருமே கேட்கவில்லையே?

பதினான்கு வயதிலேயே அவருக்கு திருமணமாகி இருக்கிறது. கணவர் ஒரு ஜெர்மானியர். எல்லாரும் கேட்டபிறகுதான் சொன்னார்.

நீண்ட காலத்துக்கு முன்பே எனக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. ஆனாலும் என்னைத் திருமணமாகாத பெண்ணாக அனைவரும் நினைக்கக் காரணம், நாங்கள் பிரிந்து வாழ்வதுதான். எனக்கு இருபத்தோரு வயதானபோது திருமண வாழ்க்கையில் ஆர்வம் முற்றிலுமாகக் குறைந்துவிட்டது. அவருக்கும் அப்படித்தான். அதன்பிறகே இருவரும் பரஸ்பரம் பிரிந்து வாழத் தீர்மானித்தோம்.

திரும்ப யாரையாவது திருமணம் செய்துகொள்ளலாமே என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில் முக்கியமானது.திருமண பந்தத்தில் இணைந்திருப்பது அத்தனை சுலபமல்ல. இதை அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறேன். மன்னிக்கவும், சமரசம் செய்து கொள்ளவும் தயாராக இல்லாதவர்கள் திருமணம் செய்துகொள்வதைத் தவிர்ப்பதே நல்லது என்கிறார். சமீபத்தில்தான் நாஜ்ஜியின் டீனேஜ் மகளின் படங்கள் ஊடகங்களில் பரபரப்போடு வெளியிடப்படுகின்றன.அவரும் சினிமாவில் நடிப்பாரா? என்று பார்ப்பவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு குடும்பத்தில் ஒரு நடிகை இருந்தால் போதாதா? என்று சூடாக பதிலளிக்கிறார் நாஜ்ஜி.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages