நடிகர் மனைவி உருக்கமான கடிதம் - Dinakaran Cinema News - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 30, 2018

நடிகர் மனைவி உருக்கமான கடிதம் - Dinakaran Cinema News

[ad_1]




நடிகர் மனைவி உருக்கமான கடிதம்
3/12/2018 2:39:09 PM

லைப் ஆப் பீ உள்ளிட்ட ஹாலிவுட் மற்றும் இந்தி படங்களில் நடித்திருப்பவர் இர்பான் கான். சமீபத்தில் இவர் வெளியிட்ட டுவிட்டர் மெசேஜில், தான் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்ததுடன் இதுபற்றி டாக்டர்கள் சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர். என்னவகை நோய் என தெரிந்தவுடன் அதுபற்றி தெரிவிக்கிறேன் எனவும் கூறியிருந்தார். இதற்கிடையில் பிரெயின் கேன்சர் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து அறியவும், நலம் விசாரிக்கவும் செல்போன் மூலமாகவும், மெசேஜ் மூலமாகவும் இர்பான் மனைவி சுதாபா சிக்தரிடம் விசாரித்தனர். அவர் எதற்கும் பதில் சொல்லாமல் மவுனம் காத்துவந்தார். தற்போது அவர் உருக்கமான ஒரு கடிதம் வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: எனது நெருக்கமான நண்பரும், எனது கணவருமான இர்பான் தனக்கு எதிராக வரும் ஒவ்வொரு தடைகளையும் எதிர்த்து போராடும் திறமையான போராளியாக திகழ்கிறார். அவரது உடல்நலம் பற்றி விசாரித்து எனக்கு உலகம் முழுவதும் இருந்தும் பலரும் மெசேஜ் மூலமாகவும், செல்போன் மூலமும் தொடர்பு கொண்டனர். அவர்கள் யாருக்கும் நான் பதில் அளிக்க முடியாத நிலையில் இருந்தேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் உங்களின் பிரார்த்தனைகளை நான் உண்மையாகவே மதிக்கிறேன்.

என்னையும் ஒரு போராளியாக கடவுளும், என் கணவரும் உருவாக்கியிருக்கிறார்கள். அதற்காக பெருமைப்படுகிறேன். தற்போது நான் நின்றுகொண்டிருக்கும் போராட்ட களத்தைப்பற்றி கவலை கொள்ளவில்லை. அதேசமயம் அதில் நான் வெற்றி கொள்வது என்பது எளிதான விஷயமும் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்களின் ஆதரவு மூலம் அந்த வெற்றியை பெறுவேன். இர்பானுக்கு என்ன ஆனது. குணம் அடைய பிரார்த்தனை மேற்கொள்வது என்பதில் மட்டுமே நேரத்தை வீணடித்துவிடக்கூடாது. அதில் எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பதை சிந்தியுங்கள். அதில் எங்கள் குடும்பமும் உங்களோடு விரைவில் இணையும். அனைவருக்கும் இதயத்தின் அடித்தளத்திலிருந்து என் நன்றிகள். இவ்வாறு இர்பான் மனைவி தெரிவித்துள்ளார்.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages