'தல'ன்னா அஜித் மட்டும்தான்; தோனியெல்லாம் கீழே தான்: ஸ்ரீசாந்த் கருத்தால் சர்ச்சை - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 20, 2018

'தல'ன்னா அஜித் மட்டும்தான்; தோனியெல்லாம் கீழே தான்: ஸ்ரீசாந்த் கருத்தால் சர்ச்சை

[ad_1]


தமிழகத்தில் 'தல'ன்னா நடிகர் அஜித் மட்டும்தான், தோனியெல்லாம் கீழேதான் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் 'தல' என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் மட்டுமே. அவரின் ரசிகர்கள் 'தல' எனும் அடைமொழியால் அஜித்தைப் பெருமைப்படுத்தி வருகின்றனர்.

திரை உலகில் அஜித்தை 'தல' என்று ரசிகர்கள் அழைப்பதுபோல், இந்தியக் கிரிக்கெட்டில் கூல் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கும் 'தல' என பெயர் வைத்து தமிழக ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.

அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றபின், அவரை தோனி என்று அழைப்பதைக் காட்டிலும் 'தல' என்று அழைப்பதையே குறிப்பாக தமிழக இளம் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இதனால், 'தல' என்றால் இப்போது, ரசிகர்கள் நடிகர் அஜித்தை அழைக்கிறார்களா, அல்லது, கேப்டன் தோனியை அழைக்கிறார்களா என்றுகூட குழப்பம் இருக்கிறது.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திடம் 'தல' என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள், யார் ஞாபகம் வரும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு ஸ்ரீசாந்த் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

’’என்னைப் பொறுத்தவரை 'தல' ஒருத்தர் மட்டுமே இருக்கிறார். சென்னை, இந்தியா, ஏன் இந்த உலகில்கூட எனக்கு தெரிந்து ஒரே ஒரு 'தல' தான் இருக்கிறார். அது நம்ம அஜித் அண்ணாதான்.

நான் 'தல' அஜித்தின் தீவிரமான ரசிகன். நான் பல இடங்களில் போஸ்டர்களைப் பார்த்து இருக்கிறேன். அதில் தோனியின் புகைப்படங்களைப் போட்டு, 'தல' என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.

எல்லாருக்கும் தெரியும் 'தல' என்றால் நம்முடைய தெரிந்தவர், பிடித்தவர் அஜித் அண்ணா மட்டும்தான். 'தல' என்ற பெயருக்கு உரியவர் அஜித் மட்டும்தான். மற்றவர்கள் அஜித்துக்கு கீழே தான். ஆனால், தோனி மீது மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். அவர் கூல் கேப்டன்.’’

இவ்வாறு ஸ்ரீசாந்த் பேசியுள்ளார்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages