‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி ரிலீஸான படம் ‘இரும்புத்திரை’. விஷால் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அர்ஜுன் வில்லனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், பி.எஸ்.மித்ரனின் இரண்டாவது படத்தில் கார்த்தி நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம் 2’ படத்தைத் தயாரித்துள்ளது. அதுமட்டுமின்றி, த்ரிஷா நடிப்பில் ‘மோகினி’ மற்றும் ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறது. தற்போது இன்னொரு முறை கார்த்தியுடன் இணைந்துள்ளது.
கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ‘வனமகன்’ சயீஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ‘மேயாத மான்’ பிரியா பவானிசங்கர் கார்த்தியின் மாமா பெண்ணாக நடித்துள்ளார். மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி வேடத்தில் கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அடுத்ததாக, புதுமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. அதைத் தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். உதயநிதி ஸ்டாலின் அல்லது விக்ரமை இயக்கப் போகிறார் பி.எஸ்.மித்ரன் என்று பேச்சு அடிபட்ட நிலையில், கார்த்தி ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
“நான் நடிகனே கிடையாது... ஹீரோ” - விஜய் ஆண்டனி வீடியோ பேட்டி
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் அரசியல் படம் ‘எல்.கே.ஜி’
முதன்முறையாக போலீஸாக நடிக்கும் பிரபுதேவா
“காளி படத்தைப் பார்க்க நிறைய காரணங்கள் வேண்டாம்; இந்த ஒண்ணு மட்டும் போதும்...” - கிருத்திகா உதயநிதி
[ad_2]
Source link
No comments:
Post a Comment