ராதிகா நடிக்கும் புதிய சீரியல் ‘சந்திரகுமாரி’ - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 30, 2018

ராதிகா நடிக்கும் புதிய சீரியல் ‘சந்திரகுமாரி’

[ad_1]


ராதிகா நடிக்கும் புதிய சீரியலுக்கு ‘சந்திரகுமாரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஹீரோயினாக அறிமுகமாகி, இன்றைக்கு அம்மா கதாபாத்திரம் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா. பெரிய திரையில் அவருக்கெனத் தனியிடம் இருப்பது போல், சின்னத்திரையிலும் அசைக்க முடியாத ஒரு இடத்தைப் பல வருடங்களாகப் பிடித்து வைத்திருக்கிறார் ராதிகா.

அது, சீரியல். அவர் தயாரித்த, நடித்த சீரியல்கள் பல செம ஹிட்டாகியுள்ளன. தற்போது அவர் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில், அக்கா - தங்கை என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா. சில வருடங்களாக ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியல், விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.



 

எனவே, அடுத்த சீரியலில் கவனம் செலுத்தித் தொடங்கிவிட்டார் ராதிகா. இந்த சீரியலுக்கு ‘சந்திரகுமாரி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்த சீரியலை, ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான ‘பாட்ஷா’ படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இந்த சீரியலை இயக்குகிறார்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages