5/14/2018 4:49:00 PM
என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2, வடசென்னை ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், முதல்முறையாக நடித்துள்ள ஹாலிவுட் படம், தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர். கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலைத் தழுவி, முழுநீள காமெடி படமாக உருவாக்கப் பட்டுள்ளது. தனுஷ், பெர்னைஸ் பெஜோ நடித்துள்ளனர். மே 30ம் தேதி பிரான்ஸ் நாட்டில் படம் ரிலீசாகிறது.
சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது. இதற்காக பிரான்ஸ் சென்றிருந்த தனுஷ், தமிழில் டப் செய்யப்படும் இந்தப் படத்துக்கு, வாழ்க்கையை தேடி நானும் போனேன் என்று பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளையே அவர் தலைப்பாக வைத்துள்ளார்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment