ஐபிஎல் முடிந்தாலும் தற்பெருமைகள் ஓயாது என்பதற்கிணங்க சிஎஸ்கே வெற்றியின் பின்னணி என்ன என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
மற்ற அணிகள் ஏலத்தில் பெரிய அளவில் பெரிய வீரர்கள் மீது முதலீடு செய்து அவர்கள் ஆட்டம் சரியாக அமையவில்லை, மாறாக தன் பர்சை இறுக்கப் பிடித்து கொஞ்சம் வயது கூட உள்ள வீரர்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து பர்சையும் காப்பாற்றி தோனி எனும் ஆளுமையினால் அணியின் திறமையயும் நிரூபித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்நிலையில் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:
மற்ற அணிகள் வீரர்களின் புள்ளிவிவரங்களைக் கையில் வைத்துக் கொண்டு கடுமையாகத் திட்டமிட்டன. ஆனால் நாங்கள் கொஞ்சம் கிரிக்கெட் உணர்வு, உள்ளுணர்வு ஆகியவற்றுடன் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்தோம்.
ஒப்பந்தத்தின் காலம் மற்றும் எப்படிப்பட்ட ஆளுமை என்ற அளவுகோல்களில் முதலீடு செய்தோம். எனவேதான் நாங்கள் புள்ளிவிவரங்கள் பின்னால் ஓடவில்லை. நாங்கள் வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பவர்கள், தொடர்ந்து இப்படித்தான் அணுகுவோம்.
தோனி வீரர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு உள்ளவர், தோனி எனும் வலுவான தலைவரின் கீழ் வீரர்களுக்கு ஊட்டப்பட்ட நம்பிக்கை, வலுவான அவர்களது பங்கு ஆகியவை எங்களுக்குச் சாதகமானது.
வயதான அணி என்றனர், அதனால்தான் தக்கவைத்த வீரர்கள் தொழில்நேர்த்தியான வீரர்கள், பங்களிப்பு செய்ய முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது. அடுத்த ஐபிஎல் இன்னும் பெரிய சவாலாகவே இருக்கும்.
இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.
இதை மிஸ் பண்ணாதீங்க:
தோனியின் ‘மின்னல் வேக ஸ்டெம்பிங்’ புதிய சாதனை:150-வது வெற்றி; ஒட்டுமொத்த சிக்ஸர்?
சிஎஸ்கே சாம்பியன்: தோனியின் புதிய சாதனைகள், அதிக சிக்ஸர் விளாசிய அணி- சுவாரஸ்யமான 10 தகவல்கள்
ஜூலை முதல் மீண்டும் ஆக்ஷன்: வார்னர், பான்கிராப்ட் கிரிக்கெட் விளையாட அனுமதி
[ad_2]
Source link
No comments:
Post a Comment