‘அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த போராட்டங்கள் இனி தொடரக்கூடாது’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் அங்குள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர்.
திடீரென ஏராளமானோர் கூடியதால், அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியது காவல்துறை. போராட்டக்காரர்கள் அதற்கு மசியாமல் போகவே, அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதற்கும் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்காததால், துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை.
இந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்தனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. பலரும் இந்த வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தனர்.தமிழக அரசின் இந்த உத்தரவுக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நடிகரும் ரஜினிகாந்தும் இதை வரவேற்றுள்ளார்.
“இந்த வெற்றி, போராட்டத்தில் உயிர் இழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்கள் ரத்தம் குடித்த இந்த மாதிரிப் போராட்டங்கள், வருங்காலத்தில் தொடரக்கூடாது என இறைவனை வேண்டுகிறேன்” என ட்விட்டரில் குரல் பதிவு வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
திட்டமிட்டு கலவரமாக மாற்றி, சுட்டுக் கொன்றார்கள்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பா.இரஞ்சித்
[ad_2]
Source link
No comments:
Post a Comment