ன்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் துப்புர வுத் தொழிலாளராகப் பணியாற்றுபவர் குமார் (டான்ஸ் மாஸ்டர் தினேஷ்) பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. அதனால், கிளார்க்காக வேலை பார்ப்பதாகச் சொல்லி, வால்பாறையில் வசிக்கும் பூங்கொடியை (மனிஷா யாதவ்) அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு உண்மை தெரியவர, கணவன் மீது வெறுப்பும், கோபமும் பொங்குகிறது பூங்கொடிக்கு. மனைவியின் விருப்பத்துக்காக வேறொரு இடத்துக்கு குடித்தனம் போகின்றனர். அங்கு எதிர் பிளாட் இளைஞனுடன் பூங்கொடிக்கு பழக்கம் ஏற்பட, அடுத்தடுத்து ஏற்படும் நகர்வே படத்தின் கதை.
எளிய மனிதர்களின் எதார்த்த வாழ்வியல் பிரச்சினைகள், கனவுகள், வேதனைகள், தவறான முடிவுகள் போன்றவற்றை மிக அழகாக திரைக்கதையாக கோர்த்து, சொல்ல வந்த கதையை அழுத்தமாக சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமிக்கு ஒரு சபாஷ். கதையோடு, காட்சி நகர்வும் சலிப்பு தட்டாமல் இருப்பது படத்தின் பெரிய பலம்.
‘பிறர்மனை விழைதல்’ என்பதை கருப்பொருளாக வைத்து, விரசமின்றி அதை நகர்த்துவது சிரமம். சமூக அக்கறையோடு பயணிக்க வேண்டும்; அதே நேரம், அந்தந்த பாத்திரங்களின் உண்மையான உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டும். இரண்டையும் நிறைவாகச் செய்திருக்கிறார் இயக்குநர்.
‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ (1979) திரைப்படத்தில் வரும் செம்பட்டை - நந்தினி, வண்டிச்சோலை கிராமத்துக்குள் பயணிப்பதுபோல, இதில் குமாரும், பூங்கொடியும் சென்னை கூவம் நதிப் பகுதியில் பயணிக்கி றார்கள்.
டான்ஸ் மாஸ்டர் தினேஷ், கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஒருவித அறியாமை, முகத்தில் படரும் அப்பாவித்தனம், சற்றே தாழ்வு மனப்பான்மை இவை எல்லாம் கலந்த முகமாய் கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறார். மனைவிக்காக உருகுவதும், அவர் வீட்டைவிட்டுப் போனதும் நெகிழ்வதுமாக அசர வைக்கிறார்.
பூங்கொடியாய் வரும் மனிஷா யாதவ், கவனிக்க வைக்கும் நடிப்பு. வலுவான பாத்திரத்தை தன்மை யாய் தாங்கியிருக்கிறார். முதல் பாதியில் புடவையில் வரும் மலைக் கிராமத்துப் பெண், மறுபாதியில் அல்ட்ரா மாடர்ன் டிரெஸ் என இரண்டுக்கும் பாந்தமாய் பொருந்துகிறார்.
இவர்களோடு யோகிபாபு, ஜார்ஜ், ஆதிரா ஆகியோரும் தங்களுக்கான பகுதியைச் செவ்வனே செய்திருக்கி றார்கள்.
உறுத்தல் இல்லாத மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு வால்பாறை, வடசென்னை, சென்னை பெருநகர குடியிருப்பு, கூவம் என படர்ந்து விரிந்து படத்தை இன்னும் அழகாக்கியிருக்கிறது.
பின்னணி இசைக்கு தீபன் சக்கரவர்த்தி (அறிமுகம்); பாடல் இசைக்கு ஜோஷ்வா ஸ்ரீதர். இருவருமே இனிமை சேர்க்கின்றனர். ‘மழை பொழிந்திடும் நேரம்’ பாடல் திரும்பக் கேட்க, பார்க்கத் தூண்டுகிறது. வரிகள் நா.முத்துக்குமார்.
இத்தனையும் இருந்தும், கதை யின் போக்கு எளிதாக ஊகிக்கும் வகையில் இருப்பதும், சில இடங்களில் நாடகத்தன்மை மேலோங்குவதும், படத்தின் முடிவில் வழக்கமான சினிமாத்தனங்கள் வருவதும் சற்றே சலிப்படைய வைக்கின்றன. ‘சிக்ஸ்பேக்’ வைத்து பணக்காரனாக இருந்தால் பெண்கள் மயங்கி விடுவார்கள் என்று எத்தனை படங்களில் காட்டப்போகிறார்களோ தெரியவில்லை. அதுவும் அவனது பிரம்மாண்ட வீட்டைப் பார்த்து மயங்குவது எல்லாம் படு அபத்தம்.
இருந்தாலும் எந்தக் காலத்துக் கும் பொருந்தக்கூடிய ஒரு கதையை, விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைக்குள் ஊடுருவி, எளிய முறையில் காட்சிப்படுத்தியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். ஒரு குப்பைக் கதை.. உண்மையில் ஒரு நல்ல கதை.
[ad_2]
Source link
No comments:
Post a Comment