அணியில் தேர்வு செய்யப்படுவேனா? இல்லையா? என்று கவலைப்படும் கட்டத்தைக் கடந்து விட்டேன்: ரோஹித் சர்மா - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 29, 2018

அணியில் தேர்வு செய்யப்படுவேனா? இல்லையா? என்று கவலைப்படும் கட்டத்தைக் கடந்து விட்டேன்: ரோஹித் சர்மா

[ad_1]


ரோஹித் சர்மா, தான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவோமா அல்லது இல்லையா என்று கவலைப்படும் காலக்கட்டத்தையெல்லம் கடந்து வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வழங்கியும் இன்னும் வழங்கிக் கொண்டும் இருக்கும் நிலையில் தன்னை ‘வெள்ளைப் பந்து ஸ்பெஷலிஸ்ட்’ என்று மட்டும் அழைக்க வேண்டாம் என்றும் குழந்தப் பருவம் முதலே டெஸ்ட் கிரிக்கெட்தான் என் கனவு அந்தக் கனவை யாரும் நிறுத்த முடியாது என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா கூறியதாவது:

ஒரு வீரராக குறிப்பிட்ட காலம்தான் உள்ளது, நான் என் காலத்தில் பாதியை முடித்து விட்டேன். எனவே மீதியிருக்கும் பாதிக் காலத்தில் என்னை அணியில் தேர்ந்தெடுப்பார்களா, மாட்டார்களா என்பதைப் பற்றி யோசிப்பதில் எந்தவொரு பயனுமில்லை. எனவே எனக்கு மீதமுள்ள காலத்தில் ஒவ்வொரு ஆட்டத்தையும் முக்கியத்துவமாகக் கருதுகிறேன்.

என்னைப்பொறுத்தவரையில் நான் அணியில் தேர்ந்தெடுக்கப்படுவேனா அல்லது மாட்டேனா என்று யோசிக்கும் காலக்கட்டத்தைக் கடந்து விட்டேன். இப்போதைக்கு ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுவதே என் நோக்கம். ஏனெனில் இதையெல்லாம் யோசித்தால் கூடுதல் அழுத்தமே மிஞ்சும். மாறாக மகிழ்ச்சியுடன் ஆடி சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து விட்டுப் போக வேண்டியதுதான்.

20 வயதில் தேசிய அணிக்குள் நுழைந்தேன் 26 வயதில்தான் டெஸ்ட் வாய்ப்பு கிடைத்தது. 2010-ல் முதல் போட்டியில் ஆடியிருக்க வேண்டும், ஆனால் காயத்தினால் அந்த வாய்ப்பு பறிபோனது. அதன் பிறகுதான் என் மன நிலை மாறியது, அதிகம் விரும்பினால் நம் அணுகுமுறை மாறிவிடும்.

சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண் ஆடிக்கொண்டிருக்கும் போது நமக்கு அணியில் இடம் கிடைப்பது கடினமே. காத்திருக்க வேண்டும், எனவே ஒரு கட்டத்துக்குப் பிறகே நான் அதைப்பற்றி யோசிப்பதை நிறுத்திக் கொண்டேன்.

ஆப்கான் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு எந்த ஒரு அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. நான் கூறினேனே என் கடன் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுவதே. முன்பு வருத்தப்படுவதற்கு போதிய நேரம் இருந்தது, இப்போது இல்லை. பெரிய பெரிய நிகழ்வுகள் காத்திருக்கின்றன எனவே அதன் மீது கவனம் செலுத்துவோம்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages