“போராட்டத்துக்கான சரியான தீர்வைக் கொடுக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவது தவறு” - இயக்குநர்கள் சங்கம் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 24, 2018

“போராட்டத்துக்கான சரியான தீர்வைக் கொடுக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவது தவறு” - இயக்குநர்கள் சங்கம்

[ad_1]


‘போராட்டத்திற்கான சரியான தீர்வைக் கொடுக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவது தவறு' என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 12 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவம், தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்துவரும் நிலையில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டினால் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

‘20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலையால் பல உயிர்களை இழக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுங்கள்’ என்று தூத்துக்குடி நகர மக்கள் போராடுகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு சரியான தீர்வைக் கொடுக்காமல், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.

இதுபோன்ற உயிர் இழப்புகளும் பேரிடர்களும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் 29.03.2013 அன்று, அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பைத் துண்டிக்கவும் உத்தரவிட்டார். ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவைத் திரும்பப் பெற்று, மீண்டும் ஆலையை நடத்தியது. ஆலையை நடத்தக்கூடாது என்று அன்றே நிரந்தரமான தடையைப் போட்டிருந்தால், இன்று நாம் 13 உயிர்களை இழந்திருக்க மாட்டோம்.

தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு, துப்பாக்கிச் சூட்டினால் தீர்வு காண முடியாது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண, உடனே ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும். அதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ 5 வருடங்களுக்கு யார் ஆட்சி செய்தாலும், முடிந்தவரைக்கும் அவருக்கு ஒத்துழையுங்கள்” - விஜய் ஆண்டனி




 


[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages