கால், மெசேஜ் மட்டுமே இனி போதாது... மாத்தி யோசிக்கும் டெலிகாம் நிறுவனங்கள்! - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 30, 2018

கால், மெசேஜ் மட்டுமே இனி போதாது... மாத்தி யோசிக்கும் டெலிகாம் நிறுவனங்கள்!

[ad_1]

சில ஆண்டுகளுக்கு முன்னர்வரைக்கும் டெலிகாம் நிறுவனங்களின் ஒரே வருமானம் கால் மற்றும் மெசேஜ் மட்டும்தான். அந்த வரலாற்றை மாற்றி எழுதியது மொபைல் இன்டர்நெட். முதலில் மற்றுமொரு வசதியாக மட்டுமே பலரது மொபைலில் புகுந்த மொபைல் இன்டர்நெட் சேவை, பின்னர் டெலிகாம் நிறுவனங்களின் தடத்தையே மாற்றியது. டேட்டாதான் இன்றைய டெலிகாம் நிறுவனங்களுக்கு உயிர்நாடி. வெறும் கால், மெசேஜ் என்று மட்டுமே வருமானம் பார்த்துக்கொண்டிருந்த நிறுவனங்களுக்கு, வெவ்வேறு வருமான வாய்ப்புகளைத் திறந்துவிட்டதும் டேட்டாதான். ஆனால், 3G, 4G என டேட்டாவை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துவிட்டால் போதும் என நினைத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு, புதியதொரு தலைவலியைக் கொண்டுவந்தது டேட்டா. Over The Top (OTT) எனப்படும் இன்டர்நெட் சேவைகள் விரைவாக வளரவே, டெலிகாம் நிறுவனங்களின் கால் மற்றும் மெசேஜ் சேவைகள் மூலமாக வந்த வருமானம் வெகுவாக குறையத் தொடங்கியது. இதற்கு சரியான உதாரணம் வாட்ஸ்அப். முதலில் விழாக்காலங்களில் ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு ஒரு ரூபாய் கொடுத்து வாழ்த்துச்செய்தி அனுப்பியவர்கள், மெசேஜ் பூஸ்டர்கள் போட்டு குட் மார்னிங் மெசேஜ் அனுப்பியவர்கள் எல்லோரும் இன்று, வாட்ஸ்அப்களில் ஃபார்வர்டு மெசெஜ்களால் திணறடித்துக்கொண்டிருக்கின்றனர். முதலில் ஃபார்வர்டு எஸ்.எம்.எஸ்.களால் நிரம்பிக்கொண்டிருந்த நமது இன்பாக்ஸ் இன்று பெரும்பாலும் OTP-க்களையும், விளம்பரங்களையும் மட்டுமே அதிகளவில் தாங்கி நின்றுகொண்டிருக்கிறது. அப்படியெனில் டெலிகாம் நிறுவனங்களால் என்னதான் செய்ய முடியும்?





ஒரேவழி, OTT சேவைகளை டெலிகாம் நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்வதுதான். ஏர்டெல் நிறுவனத்தின் வின்க் மியூசிக் ஆப், ஏர்டெல் டிவி ஆப் மற்றும் ஜியோவின் டிவி, மியூசிக் போன்ற சேவைகள் போன்றவை அனைத்தும் இந்த நோக்கத்தில் வந்தவைதான். அப்படி இன்றைய டெலிகாமின் ட்ரெண்ட்டாகவே மாறிவிட்டது இந்த மதிப்புக்கூட்டு சேவைகள். ஒருபக்கம் வருமானத்தை ஈட்டித்தருவதோடு மட்டுமின்றி வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும் இந்த மதிப்புக்கூட்டு சேவைகள் தேவைப்படுகின்றன. நேற்று ஏர்டெல் நிறுவனம்கூட புதிதாக ஒரு விஷயத்தை அறிவித்தது. ரஜினிகாந்தின் புதிய படமான 'காலா' உடன் இணைந்து ஏர்டெல் டி.வியில் புதிய நிகழ்ச்சிகளை வழங்குவதுதான் அது. இதன்மூலம் ஏர்டெல் டிவி ஆப்பில், காலா திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர், படமாக்கப்பட்ட பின்னணி காட்சிகள், பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இலவசமாகக் காணலாம். மேலும், காலா திரைப்படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாகப் பெறுவதற்கான போட்டியிலும் பங்கேற்கலாம்.





ஏர்டெல் நிறுவனம் ரஜினிகாந்த் திரைப்படத்துடன் கைகோப்பது இது முதல்முறையல்ல; இதற்கு முன்பு கோச்சடையான் மற்றும் கபாலி திரைப்படத்துக்கும் ஏர்டெல் நிறுவனம் டெலிகாம் பார்ட்னராக இணைந்திருந்தது. முதலில் எல்லாம் ஒரு டெலிகாம் நிறுவனம் திரைப்படத்தோடு இணைந்தால், காலர்டியூன் மற்றும் ஹலோ டியூனோடு நின்றுவிடுவார்கள். அதைத்தாண்டி சில ஸ்பெஷல் சிம் கார்டுகள், ஸ்பெஷல் கூப்பன்கள் மட்டுமே வெளிவரும். ஆனால், தற்போது டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கைகொடுப்பதால், அவற்றைத் தாண்டியும் நிறுவனங்களால் வருமானம் பார்க்கமுடிகிறது. இதுபோன்ற பிளாட்ஃபார்ம்கள் ஒரு டெலிகாம் நிறுவனங்களுக்கு எந்தளவுக்கு உதவுகின்றன என்பது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் கேரளாவுக்கான தலைவர் மனோஜ் முரளியிடம் பேசினோம்.



``வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்குவதற்கும், அவர்களை எங்களின் பிளாட்ஃபார்மில் என்கேஜ்டாக வைத்திருக்கவும் இதுபோன்ற முயற்சிகள் உதவுகின்றன. ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்ற நிறுவனங்கள் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றன. அவற்றை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசெல்லும் ஊடகமாக ஏர்டெல் டி.வி இருக்கும். 10,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 350-க்கும் மேற்பட்ட சானல்கள் என ஏர்டெல் டிவியில் இருக்கின்றன. ஒரே ஆப்பில் திரைப்படங்கள் பார்க்கலாம்; லைவ் சானல்கள் பார்க்கலாம்; வீடியோக்களை பார்க்கலாம்; தற்போது அவர்களுக்கு கூடுதல் சலுகையாக இந்த காலா நிகழ்ச்சிகள் இருக்கும்."; என்றார்.



காலா நிகழ்ச்சிகளைப் போல வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்குவதுதான் டெலிகாம் நிறுவனங்களின் நோக்கம் என்றாலும், அதைத்தாண்டியும் சில நன்மைகள் டெலிகாம் நிறுவனங்களுக்கு இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சேவையை ஒரு வருடத்துக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்தது ஏர்டெல். இதற்காகவே ஏர்டெல் போஸ்ட்பெய்டு சேவையைப் புதிதாக வாங்கியவர்கள் நிறைய பேர்; போஸ்ட்பெய்டு சேவையில் இருந்து வெளியேற நினைப்பவர்களும் இந்த அறிவிப்பால், முடிவைக் கொஞ்சம் தள்ளிவைத்திருப்பர். ஐபிஎல் போட்டியை இலவசமாகப் பார்க்கலாம் என ஏர்டெல் அறிவித்தபோதும் இதேபோல நல்ல வரவேற்பு இருந்தது. இதுதான் மதிப்புகூட்டு சேவைகளின் வெற்றி.





டெலிகாம் சந்தையில் கடும்போட்டி நிலவும் தற்சமயத்தில் வாடிக்கையாளர்களை ஒரே நெட்வொர்க்கில் தக்கவைப்பதே பெரும்பாடு. இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்களை உள்ளே கொண்டுவருவது என்பது அவ்வளவு சுலபமா என்ன? அதனால்தான் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் என எல்லா நிறுவனங்களும் இப்படி மதிப்புக்கூட்டு சேவைகளை, வாடிக்கையாளர்களுக்கு அள்ளிவழங்குகின்றன.



நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே கன்டென்ட்டை சொந்தமாகத் தயாரிப்பவை; அல்லது நிகழ்ச்சிகளை அதிகாரபூர்வமாக வாங்குபவை. ஆனால், ஏர்டெல் டி.வி, ஜியோ டி.வி போன்றவை அப்படியல்ல; இவை வெறும் அக்ரிகேட்டர்கள் மட்டும்தான். அதாவது, அவற்றின் நிகழ்ச்சிகளை, இவர்களின் ஆப்ஸ் மூலம் பார்க்கமுடியும். அவ்வளவே! இருந்தும் டெலிகாம் நிறுவனங்களை, மற்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் விரும்பக்காரணம், டெலிகாம் நிறுவனங்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை.



இன்று ஏர்டெல் நிறுவனத்திடம் மட்டுமே தமிழகத்தில் 2 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு இந்தியா முழுவதுமே கூட இவ்வளவு வாடிக்கையாளர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. எனவேதான் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. அவற்றின் சேவையை டெலிகாம் நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்கின்றன.



டெலிகாம் சந்தையில் இந்தப் போட்டி நிலைக்கும் வரைக்கும், வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்தான்!



[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages