4/23/2018 12:30:28 PM
ஹீரோ, ஹீரோயின்கள் தங்கள் கதாபாத்திரங்களில் ஒன்றி நடிப்பதற்காக உடன் நடிப்பவர்களையும் அரவணைத்துக் கொள்வது வழக்கம். உடன் நடிப்பவர்கள் நடிகர்களாக இருந்தால் பிரச்னை இல்லை, முன் பின் கேமராவை பார்த்து அனுபவம் இல்லாதவர்களுடன் நடிப்பது சிரமமான விஷயம்தான். அதையும் தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் நடிகர்களில் ஒருவர் அமிதாப்பச்சன். ‘102 நாட் அவுட்’ இந்தி படத்தில் 102 வயதானவராக நடித்து வருகிறார் அமிதாப்பச்சன். அவரது நண்பராக ரிஷிகபூர் நடிக்கிறார்.
இருவரும் தாத்தா வேடத்தில் லூட்டி அடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இப்படத்திற்காக இருவரும் சொந்த குரலில் பாடலும் பாடியிருக்கின்றனர். அப்பாடலுக்கு அமிதாப்பே இசை கம்போஸ் செய்திருக்கிறார். அதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. பிறகு டாக்ஸி, ஆட்டோவில் அமிதாப் பயணம் செய்யும் காட்சிகள் படமாக்கப்பட்டது. டாக்ஸி காட்சியை படமாக்க அப்பகுதியில் நின்றிருந்த ஒரு டாக்ஸி டிரைவரை அழைத்து வந்தனர்.
முதலில் வயதான கெட்டப்பில் இருப்பது அமிதாப் என்று தெரியாமல் இருந்த டிரைவரிடம் இவருடன்தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியபோது ஓகே சொன்னார். பிறகு அருகில் நிற்பது அமிதாப்பச்சன் என்று தெரிந்ததும் ஆடிப்போனார். இவருடன் நான் எப்படி நடிப்பது, பயமாக இருக்கிறது, எனக்கு நடிப்பு வராது என்று தயங்கினார். அதைப்பார்த்த அமிதாப் டிரைவரை தன் அருகில் அழைத்து சகஜமாக பேசினார்.
‘ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் கேட்டு அலைவதற்காக டாக்ஸியில் செல்லும்போது டாக்ஸி டிரைவர் எனக்கு உற்சாகமான வார்த்தைகள் சொல்வார். அது நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும், எனது நம்பிக்கைக்கு அவர்கள் தந்த ஊக்கமும் காரணமாக இருந்தது. என்னுடன் நடிப்பதற்கு பயம் எதுவும் வேண்டாம். என்னை ஒரு பயணியாக நினைத்துக்கொண்டு பேசு அதுபோதும்’ என்றார். அமிதாப் பேச்சை ஏற்றுக்கொண்டு டாக்ஸி டிரைவர் நடித்தார். ஒரே டேக்கில் காட்சி ஓகே ஆனது. அதேபோல் ஆட்டோவில் பயணிப்பதுபோல் அமிதாப் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன.
[ad_2]
Source link
No comments:
Post a Comment