​செல்போனில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய 6 செயலிகள்! - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

​செல்போனில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய 6 செயலிகள்!

[ad_1]

ஒவ்வொரு ஆண்டும், செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையை மேலும் எளிதாக்குவதற்காக பலவகையான புதிய செயலிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.


கடந்த 2017 டிசம்பர் கணக்கெடுப்பின்படி, 35 லட்சம் செயலிகள், ப்ளே ஸ்டோரில் (Play store) இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அளவுக்கு அதிகமான செயலிகள் குவிந்துகிடப்பதினால், எந்த செயலியை நாம் பதிவிறக்கம் (download) செய்யவேண்டும் என்ற குழப்பம் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். 


அந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில், அனைவரின் செல்போனிலும் இருக்கவேண்டிய முக்கியமான ஆறு செயலிகளின் பட்டியல்:


1.பிக்பாஸ்கட் (Big Basket)


அனைவரின் தேவைகளில் மிக முக்கியமான தேவையாக இருப்பது உணவு. அந்த உணவு பொருட்களை மிக எளிமையாக, ஆன்லைனில் வாங்கிக்கொள்வதற்காகவே இருக்கிறது இந்த செயலி. உணவுப்பொருட்கள் மட்டுமல்லாமல், வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிக எளிமையாக வாங்கிக்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த செயலி.


நாம் ஆர்டர் செய்யும் பொருட்களை நமது வீட்டு வயிலுக்கே கொண்டு வந்து கொடுப்பதினால், பணம் மற்றும் நேரம் விரையமாகாமல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சில சமயங்களில் நாம் வாங்கும் பொருட்களுக்கேற்ப தள்ளுபடியும் கொடுக்கிறார்கள்.


2. பேடிஎம் (Paytm)


பணமதிப்பிழப்பு செய்ததில் இருந்து, இந்த பேடிஎம் செயலி, காட்டுத்தீயைப்போல் பரவிவிட்டது. பெரிய கடைகள் மட்டுமல்லாமல் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு வியாபாரிகளும் இந்த செயலியை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.


பணப்பரிவர்த்தனையை மிக எளிதாக மாற்றிவிட்ட இந்த செயலியின் மூலம், ரீசார்ஜ் (recharge) செய்துகொள்வது மட்டுமல்லாமல், பில் தொகையையும் செலுத்திக்கொள்ளலாம்.


மேலும், இந்த செயலியை பயன்படுத்தி பில் தொகையை செலுத்துபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்குகிறது பேடிஎம்.


3. லைஃப்ஈசி (lyfeasy)


தற்பொழுதைய காலகட்டத்தில் ஏசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஏசி வைத்திருந்தாலும், அடிக்கடி அந்த ஏசி பழுதடைந்துவிட்டால், அதனை பயன்படுத்துவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும். அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட செயலிதான் லைஃப்ஈசி.


இந்த செயலி மூலம், ஏசி பழுதுபார்ப்பவர்கள் மட்டுமல்லாமல், பிளம்பர் மற்றும் சில தொழில்நுட்பம் சார்ந்த வேலை செய்பவர்களையும் மிக எளிதில் கண்டுபிடித்துவிடலாம். 


4. சொமேட்டோ (Zomato)


எந்த இடத்திற்கு சென்றாலும், அதன் அருகில் இருக்கும் உணவகங்களை சுட்டிக்காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த செயலி. அந்த உணவகங்களில் சாப்பிட்டவர்களின் கருத்துக்கள் அந்த செயலியில் பதிவிடப்பட்டுள்ளதால், சுவையான உணவு அளிக்கக்கூடிய உணவகங்களை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.


மேலும் சொமேட்டோ ட்ரீட் என்ற ஒன்றை பயன்படுத்தி, குளிர்பானம் மற்றும் சில உணவு வகைகளை இலவசமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.


5. ஓலா (OLA)


நம்மிடம் வண்டி இருக்கிறதோ இல்லையோ, நம் செல்போனில் ஓலா செயலி கண்டிப்பாக இருக்கவேண்டும். குறைவான விலையில் அதிக தூரம் பயணம் செய்வதற்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


ஜிபிஎஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை மிக எளிதில் கணக்கிட்டு, விரைவில் வாடிக்கையாளரை காரில் ஏற்றிச்செல்வதால் அனைவரும் உபயோகிக்கக்கூடிய ஒரு செயலியாக இருக்கிறது ஓலா செயலி.


6. புக் மை ஷோ (Book My Show)


புக் மை ஷோ செயலி மூலம் படத்திற்கோ, விழாவிற்கோ டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ளலாம். நாம் பயன்படுத்தும் மற்ற செயலிகளை போலவே, இதிலும் தள்ளுபடி வழங்குகின்றனர்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages