4/2/2018 2:42:28 PM
டெர்மினேட்டர், கோனான் தி பார்பாரியன், ட்ரு லைஸ் உள்ளிட்ட ஏராமான ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் அர்னால்டு ஸ்வார்ஸினிகர். அமெரிக்காவில் கலிபோர்னியா கவர்னராகவும் பதவி வகித்திருக்கிறார். இவருக்கு இதயத்தில் பல்மோனிக் வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.
இதுபற்றி அவரது மேனேஜர் டேனியல் கெட்செல் கூறியது: 70 வயதாகும் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்தது.
அவர் நலமுடன் இருக்கிறார். சிகிச்சைக்கு பிறகு கண்விழித்த அவர் சொன்ன முதல்வார்த்தை ‘ஐயம் பேக்’ (நான் திரும்பவந்துட்டேன்) என்பதுதான். ஏற்கனவே கடந்த 1997ம் ஆண்டு அவருக்கு பல்மேனிக் வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அதை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. 10 அல்லது 15வருடத்துக்கு பிறகு அது செயலிழக்கும் என்பதால் புதிதாக மாற்ற வேண்டும். அந்த சிகிச்சைதான் தற்போது நடந்தது’ என்றார்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment