ஸ்பீக்கர், சென்சார், கேமரா கிடையாது... முன்பக்கம் முழுவதும் டிஸ்ப்ளே! #BezelLessDisplay - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 30, 2018

ஸ்பீக்கர், சென்சார், கேமரா கிடையாது... முன்பக்கம் முழுவதும் டிஸ்ப்ளே! #BezelLessDisplay

[ad_1]





தொழில்நுட்ப உலகில் மாற்றம் என்பது மின்னல் வேகத்தில் நடந்து விடக்கூடிய ஒன்று. இன்றைக்கு ஒரு புதிய தொழில்நுட்பம் பிரமிப்பாக பார்க்கப்படும் பொழுதே அதை மிஞ்சும் வகையில் மற்றொரு தொழில்நுட்பம் வந்து விடுகிறது. அதுவும் மொபைல் என்றால் கேட்கேவே வேண்டாம். இதுதான் இருப்பதிலேயே சிறந்த வசதி என்று விளம்பரங்கள் செய்யும் நிறுவனங்கள்கூட அடுத்த வருடம் அதை மறந்து விடுகின்றன. மொபைல்களில் இந்த மாற்றம் வேகமாக நடந்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அப்படி ஸ்மார்ட்போன்களில் சமீப காலங்களில் வேகமாக மாற்றமடைந்து வருவது டிஸ்ப்ளேதான்.



முழு டிஸ்ப்ளேவையும் பயன்படுத்த முடியுமா ?




டிஸ்ப்ளே



நீண்ட காலமாகவே டிஸ்ப்ளே முழுவதையும் பயன்படுத்தும் வகையில் அதை வடிவமைக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன. TFT, LED என அதன் தொழில்நுட்பங்கள் மாறியிருக்கின்றன. ஆனால், அதன் வடிவம் மட்டும் மாற்றமடையவில்லை. மொபைலின் முன்புறம் முழுவதும் டிஸ்ப்ளே இருந்தாலும் அதை நம்மால் முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை. ஸ்பீக்கர், சென்சார், கேமரா போன்றவற்றுக்கு டிஸ்ப்ளேவின் மேல் பக்கம் இடம் மற்றும் கீழே நேவிகேஷன் பட்டன்கள் ஆகியவைதான் பொதுவான டிஸ்ப்ளேவில் அம்சங்கள். இது தவிர டிஸ்ப்ளேவின் பக்கவாட்டு ஓரங்களில் சிறிய இடைவெளி இருப்பதைப் பார்க்க முடியும். அதை பெஸல்ஸ் என்று அழைக்கிறார்கள். இது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்குப் பொதுவானது. இவற்றைத் தவிர்த்துவிட்டு டிஸ்ப்ளேவை வடிவமைக்க முடிவதில்லை. ஆகவேதான் நம்மால் முழு டிஸ்ப்ளேவையும் பயன்படுத்த முடிவதில்லை. சமீப காலமாக அதில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. டிஸ்ப்ளேவில் இருக்கும் பெஸல்களை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு அதை உருவாக்கும் முயற்சியில் சில மொபைல் நிறுவனங்கள் இறங்கியிருக்கின்றன. 



முன்னிலையில் இருக்கும் சீன நிறுவனங்கள்:



மொபைல்



ஸ்மார்ட்போன்கள் என்று பார்த்தால் அதில் முன்னோடியான ஆப்பிளால் கூட இதுபோன்ற மொபைலை வடிவமைக்க முடியவில்லை. கடந்த வருடம் வெளியான ஐபோன் x-ல் கூட மேற்பகுதியில் நாட்ச் இருந்தது. சாம்சங்குக்கும் கூட கிட்டத்தட்ட இதே நிலைதான். ஆனால், சீன நிறுவனங்களோ இந்த விஷயத்தில் முன்னிலையில் இருக்கின்றன. சமீப காலமாகவே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. ஆகவே, பெரிய நிறுவனங்கள் கூட செய்யாத சில விஷயங்களை அவர்களால் செய்ய முடிகிறது. எடுத்துக்காட்டாகத் திரைக்கு அடியில் பிங்கர்பிரின்ட்டை கொண்டு வந்தது ஒரு சீன நிறுவனம்தான். பெரிய நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை சீன நிறுவனங்கள் காப்பியடித்த காலம் போய் இப்போது இவர்களைத்தான் பெரிய நிறுவனங்கள் காப்பியடிக்கும் நிலை இருக்கிறது.



மாற்றி யோசித்ததால் கிடைத்த வழி



விவோ



எல்லாம் சரி முன்புறம் இருக்கும் பெஸல்களை நீக்கிவிடலாம் சென்சார், ஸ்பீக்கர் மற்றும் கேமராவை என்ன செய்வது? யோசித்தார்கள் சென்சார் மற்றும் ஸ்பீக்கரை டிஸ்ப்ளேவுக்கு அடியில் கொண்டு வைத்தார்கள் இன்னும் மிச்சம் இருப்பது ஒன்றே ஒன்று கேமரா மட்டும்தான். அதைக் கொண்டுபோய் டிஸ்ப்ளேவிற்கு அடியில் வைக்க முடியாதே. யோசித்தவர்கள் அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். விவோ நிறுவனம் APEX என்ற மொபைலின் மாதிரி வடிவமைப்பை வெளியிட்டிருந்தது. அதில் கேமரா மொபைலின் மேற்பகுதியின் உள்ளே மறைந்து வைக்கப்பட்டிருந்தது போட்டோ எடுக்க வேண்டும் என்றால் கேமரா வெளியில் வரும். வேலை முடிந்ததும் உள்ளே சென்று மறைந்துவிடும். ஆனால் மற்றொரு நிறுவனமோ இவ்வளவெல்லாம் கூட கஷ்டப்படவில்லை ரொம்ப சிம்பிளாக வேலையை முடித்துவிட்டது.



 டிஸ்ப்ளே



Doogee என்ற சீன நிறுவனம் பழைய மொபைல்களில் இருந்த ஸ்லைடிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த நிறுவனம் வடிவமைத்திருக்கும் மொபைலில் கேமரா வேண்டுமென்றால் ஸ்லைடு செய்தால் போதுமானது. இவையெல்லாம் பிரபலமாகாத நிறுவனங்கள் என்பதால் இந்த மொபைல்கள் உலக அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ஆனால், அடுத்ததாக இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது லெனோவோ நிறுவனம். லெனோவோ அறிமுகப்படுத்தவுள்ள Z5 என்ற ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதுவும் பெஸல் லெஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.



 லெனோவோ



சீன நிறுவனங்கள் மற்றவர்களைக் காப்பி அடிப்பதாக நமக்குத் தோன்றினாலும் அவைதாம் தொழில்நுட்பங்களை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு செல்ல உதவுகின்றன. அதிக பட்சம் இன்னும் ஒரு வருடத்துக்குள்ளாக நாட்ச்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பரவலாகி விடும். அதற்கடுத்த இரண்டு வருடங்களில் அதுவும் கூட இல்லாத  ஸ்மார்ட்போன்கள் நம் கைகளில் இருக்கும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages