ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் 'எல்கேஜி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார் நாஞ்சில் சம்பத்.
மேடைப் பேச்சாளர், இலக்கியவாதி, பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் நாஞ்சில் சம்பத். அரசியல் கட்சிப் பேச்சாளர்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதில் வெற்றி கண்டவர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா கேட்டுக்கொண்டதற்கிணங்க, டிடிவி தினகரன் அணியில் இயங்கி வந்தார். தினகரன் அமமுக கட்சி ஆரம்பித்த போது அதில் திராவிடமும், அண்ணாவின் பெயரும் இல்லை எனக் கூறி அணியிலிருந்து விலகினார்.
தற்போது நாஞ்சில் சம்பத் அரசியல் தொடர்புடைய 'எல்கேஜி' எனும் படத்தில் நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை பிரபு இயக்குகிறார். இப்படத்தின் நாயகனாக ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இதில் அவருக்குத் தந்தையாக நாஞ்சில் சம்பத் நடிக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை உரிமையை, திங்க் மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment