ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா; 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா; 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி

[ad_1]


மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. நவ்னீத் கவுர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

கொரியாவின் டோங்கா சிட்டியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தியது. 7-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா உதவியுடன் பந்தை பெற்ற நவ்னீத் கவுர் ஜப்பான் கோல்கீப்பரை லாவகமாக ஏமாற்றி கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இந்திய வீராங்கனைகள் பந்தை கையாள்வதில் வேகம் காட்டியதுடன் ஜப்பான் அணிக்கு அழுத்தம் கொடுத்தபடியே இருந்தனர்.

25-வது நிமிடத்தில் வலது ஓரத்தில் பந்தை பெற்ற வந்தனா கட்டாரியா சாமர்த்தியமாக மார்க் செய்யப்படாத நவ்னீத் கவுருக்கு பந்தை தட்டிவிட அதை அவர் கோலாக மாற்றினார். இதனால் 2-வது கால் பகுதியின் முடிவில் இந்திய அணி 2-0 என்ற முன்னிலையை பெற்றது. 3-வது கால் பகுதி தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அடுத்தடுத்து இரு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இதனை தீப் கிரேஸ், குர்ஜித் கவுர் ஆகியோர் வீணடித்தனர்.

53-வது நிமிடத்தில் இந்தியா 3-வது கோலை அடித்தது. இந்த கோலை உதிதா உதவியுடன் அனுப் பர்லா அடித்திருந்தார். அடுத்த 2-வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் மேலும் ஒரு பீல்டு கோல் அடித்து ஜப்பான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆட்டம் முடிவடைய இரு நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் ஜப்பானின் அகி யமடா கோல் அடித்தார்.முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் வரும் 16-ம் தேதி சீனாவுடன் மோதுகிறது. - பிடிஐ




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages