34 ரன்கள் வித்தியாசத் தோல்வி நெருக்கமான போட்டி? ஆம் என்கிறார் ஸ்டீபன் பிளெமிங் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 19, 2018

34 ரன்கள் வித்தியாசத் தோல்வி நெருக்கமான போட்டி? ஆம் என்கிறார் ஸ்டீபன் பிளெமிங்

[ad_1]


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியிடம் அடைந்த 34 ரன்கள் தோல்விக்கு பேட்ஸ்மென்களே காரணம் என்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

இந்தத் தோல்வி குறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

பெரும்பாலான அணிகளுக்கு இறுதி ஓவர்களின் பவுலிங் பிரச்சினைகள் உள்ளன. பிராவோ கடந்த போட்டியில் எதிரணி 200 ரன்களுக்குச் செல்லாமல் 180க்கு மட்டுப்பட உதவினார். இதுதான் இந்த ஆட்டத்தின் போக்கு. இந்தத் தொடரில் பிராவோவுக்கு நல்ல நாட்கள் அமைந்தன, இந்தப் போட்டியில் அமையவில்லை, பவுலிங் நன்றாகத்தான் இருந்தது.

பேட்டிங்கில்தான் போட்டியை இழந்தோம். முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணிகளை உருவாக்கவில்லை. எங்களிடம் முனைப்பு இருந்தது ஆனால் உத்வேகத்தை உருவாக்குவது கடினமாக அமைந்தது. பிட்ச் கொஞ்சம் வேகமாக மாறும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அவர்கள் பந்துகளை நன்றாகக் கலவையாக வீசினர்.

இடைவேளைக்குப் பிறகு ரெய்னா ஆட்டமிழந்தார், அங்கிருந்து ஆட்டத்தை நகர்த்திச் சென்றிருந்தால் ஆட்டம் வேறு விதமாகப் போயிருக்கும். ஆனால் அவர்கள் கேட்ச்களைப் பிடித்தனர், அழுத்தம் ஏற்படுத்தினர். இது நெருக்கமான ஆட்டம்தான், முக்கியத் தருணங்களில் அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.

 

தொடர்புடைய செய்திகள்

53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி: டெல்லிக்கு ஆறுதல் வெற்றி

2வது இன்னிங்சில் பிட்ச் கடினமாக இருந்தது: தோல்விக்குத் தோனியின் காரணம்

 

 

 

 

 




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages