“இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2-வில் கெளதம் கார்த்திக் இல்லை” - இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 19, 2018

“இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2-வில் கெளதம் கார்த்திக் இல்லை” - இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்

[ad_1]


‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இரண்டாம் பாகத்தில் கெளதம் கார்த்திக் இல்லை என இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அவருடைய இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் காமெடிப் படமான இதில், கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். வி.ஜே. ஷா ரா, கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இந்தப் படத்துக்கு, பாலமுரளி பாலு இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே சில எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், படம் வெளியானதற்குப் பின்பு பலத்த விமர்சனங்கள் எழுந்தன. திரைத்துறையில் இருந்தே பலர் இந்தப் படத்தை எதிர்மறையாக விமர்சித்தனர். குறிப்பாக, இயக்குநர் பாரதிராஜா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வெளிப்படையாகவே இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



 

ஆனாலும் மனம் தளராத இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், ‘தான் செய்தது சரிதான்’ என்ற முடிவில் இருக்கிறார். இவ்வளவு எதிர்ப்புகள் வந்தபோதிலும், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக, முதல் பாகத்தில் எடுத்த சில காட்சிகளை, அடுத்த பாகத்துக்காக வைத்திருக்கிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற காட்சிகளைவிட, இதில் அடல்ட் விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்குமாம்.

‘அடுத்த செட் விர்ஜின் பசங்களுடன் உங்களைச் சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் சந்தோஷ் பி ஜெயக்குமார்’என ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் முடியும். கெளதம் கார்த்திக் படத்தில் விர்ஜினிட்டியை இழந்துவிட்டதால், அவரால் அடுத்த பாகத்தில் நடிக்க முடியாது. எனவே, வேறொரு நடிகரை வைத்து இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

அதற்கு முன்பாக, அவருடைய மூன்றாவது படமான ‘கஜினிகாந்த்’ படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் சந்தோஷ். ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், ராஜேந்திரன், சம்பத் ராஜ், ‘ஆடுகளம்’ நரேன், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ‘யு’ சான்றிதழ் படமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

“நான் நடிகனே கிடையாது... ஹீரோ” - விஜய் ஆண்டனி வீடியோ பேட்டி

முதல் பார்வை: காளி

‘இரும்புத்திரை’ இயக்குநரின் அடுத்த படத்தின் ஹீரோ கார்த்தி

“காளி படத்தைப் பார்க்க நிறைய காரணங்கள் வேண்டாம்; இந்த ஒண்ணு மட்டும் போதும்...” - கிருத்திகா உதயநிதி

முதன்முறையாக போலீஸாக நடிக்கும் பிரபுதேவா




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages