இசை மற்றும் நட்பினை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள பிட்ச் பெர்ஃபெக்ட் 3 / pitch perfect 3 - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 31, 2018

இசை மற்றும் நட்பினை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள பிட்ச் பெர்ஃபெக்ட் 3 / pitch perfect 3

[ad_1]




இசை மற்றும் நட்பினை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள பிட்ச் பெர்ஃபெக்ட் 3
1/5/2018 4:39:45 PM

யுனிவெர்சல் பிக்சர்ஸ் தயாரிப்பில் ட்ரிஸ் சி இயக்கத்தில் பிட்ச் பெர்ஃபெக்ட் சீரிஸின் மூன்றாம் பாகம் ’பிட்ச் பெர்ஃபெக்ட் 3’. பள்ளி முதல் கல்லூரி வரை யாராலும் ஜெயிக்க முடியாத பெண்கள் இசைக் குழு தி பர்டென் பெல்லாஸ். எவ்வித கருவிகளும் இல்லாமல் குரல்களிலேயே இசையமைத்துப் பாடக்கூடிய பெண்கள் பெல்லாஸ். கல்லூரியில் உலக சாம்பியன்ஷிப். அடுத்தென்ன அவரவர் வாழ்க்கை , வேலை என ஒவ்வொருவரும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரியின் புதிய பெல்லாஸ் குழு இந்த சீனியர் குழுவை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்க இவர்களும் , நீண்ட இடைவெளிக்குப் பிறகு குரூப் பாடல் என சென்றால் அங்கே புது கும்பல் இவர்களை பார்வையாளர்களாக மட்டுமே அழைத்திருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் குழுவை மிஸ் செய்வதாக புலம்ப , ஆப்ரே போசன், என் அப்பா ராணுவ அதிகாரியாக இருக்கிறார். அவர்கள் கேம்பில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக பாடலாமே என ஐடியாக் கொடுக்க , கூட்டமாக கிளம்புகிறார்கள். அங்கேயோ ஏற்கனவே இவர்களை மிஞ்சும் பாடகர்கள், இசைக்கருவிகள் சகிதமாக இவர்களுக்கு பல்ப் கொடுக்கிறார்கள். எனினும் விடா முயற்சியுடன் இவர்கள் திறமையைக் காட்டி ஒவ்வொரு கேம்பாக முன்னேறிச் செல்கிறார்கள். இதற்கிடையில் குழுவில் ஒரு பெண்ணுக்கு மட்டும் பிரபல டிஜேவின் குழுவில் பட வாய்ப்புக் கிடைக்கிறது. முடிவு என்ன என்பது மீதிக்கதை.

ஹேண்ட்சம் ஆண்களைக் கண்டதும் உடல் மொழிகளை மாற்றி ஜொல்லு விடுவது, மாறி மாறி பாடிக்கொண்டே ஸ்டைலிஷாக ஆடுவது, ஆக்‌ஷனில் துவம்சம் செய்வதுமாக அதிரடி காட்டுகிறார்கள் பெல்லாஸ் கேர்ள்ஸ். இசை சார்ந்த படத்திற்கு ஏற்ப கிறிஸ்டோபர் லின்னெர்ட்ஸின் பாடல்களும், பின்னணியும் காட்சிகளில் அற்புதம் செய்கிறது. மேலும் மேத்யூ க்ளார்க்கின் ஒளிப்பதிவு மேடை நடனக் காட்சிகளிலும் ,ஆக்‌ஷன் காட்சிகளிலும் மேஜிக் காட்டுகிறது.

பெண்கள் படம் என்றாலே ஆணாதிக்கம், பெண் சுதந்திரம், வன்கொடுமை என க்ளாஸ் எடுக்கும் பெரும்பாலான படங்களுக்கு இடையில் நட்பு, இசை என வித்யாசமான காமெடி கலாட்டாவாக அமைந்திருக்கும் இந்த பிட்ச் பெர்ஃப்க்ட் சீரிஸில் மூன்றாம் பாகமும் ஜாலியாக நம்மை கைதட்ட வைத்து கடந்து செல்கிறது.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages