'இந்தியன் 2' படத்துக்கு அனிருத் இசையமைப்பாளர்
30 மே, 2018 - 16:26 IST
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி வெளியான படம் 'இந்தியன்'. அப்பா - மகன் என கமல் இரண்டு வேடங்களில் நடித்த அந்தப்படத்தில் அப்பா கமலுக்கு ஜோடியாக சுகன்யாவும், மகன் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும் நடித்தனர்.
இந்தப் படம் வெளியாகி 22 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் தயாராகிறது.
இந்தப்படம் குறித்து கடந்த வருடம் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டது. தெலுங்குப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாக இருந்த இந்தப் படம், பிறகு லைகா புரொடக்ஷனுக்கு கைமாறியது.
'2.0' ரிலீஸுக்குப் பிறகு இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்தியன்-2 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமான அனிருத்துக்கு அடுத்த ஜாக்பாட்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment