போஸ்ட்பெயிட் 199 ரூபாய் மட்டுமே.... ஜியோவின் அடுத்த அட்டாக்! #JioPostpaid - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 31, 2018

போஸ்ட்பெயிட் 199 ரூபாய் மட்டுமே.... ஜியோவின் அடுத்த அட்டாக்! #JioPostpaid

[ad_1]





ஜியோவின் வருகைக்கு முன்னர் மொபைல் நிறுவனங்கள் டேட்டா பேக்குகளின் விலையை அதிகமாக நிர்ணயித்திருந்தார்கள். ஒருவர் ஒரு ஜிபி இன்டர்நெட் பேக்கிற்காக ஒரு மாதம் செலவழித்த தொகைக்கு மாதம் முழுவதும் தினமும் ஒரு ஜிபி டேட்டாவை வாரி இறைத்தது ஜியோ. அதன் பிறகு மற்றவர்களையும் அதே வழிக்கு வர வைத்தது. ஜியோ சந்தையில் கால் பதித்த பின்னர் அது ஏற்படுத்திய தாக்கம் என்பது பலரும் கணித்ததைவிட அதிகமாக இருந்தது.



ஜியோ




இந்நிலையில்தான் மொபைல் நிறுவனங்களை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது ஜியோவின் புதிய அறிவிப்பு. அதன் வழக்கமான பாணியில் போஸ்ட்பெயிடில் புதிய பிளானை அறிவித்திருக்கிறது.  ப்ரீபெயிடில் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், அதன் அடுத்த பார்வை மீதமிருந்த போஸ்ட்பெயிடின் மீது விழுந்திருக்கிறது. ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் அதன் நீண்டகால வாடிக்கையாளர்கள் போஸ்ட்பெயிட் பிளானில் கணிசமான அளவில் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் தற்போழுது தூண்டில் போடுகிறது ஜியோ. மற்ற நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதற்காகக் குறைவான விலையில் டேட்டா பேக்குகளை கொடுத்தாலும் தனது வழியில் தரை லெவலுக்கு இறங்கி அடிக்கிறது ஜியோ. 



ஜியோவின் பிளானில் என்ன ஸ்பெஷல்?



ஜியோவின் புதிய போஸ்ட்பெயிட் பிளான்களில் என்ன ஸ்பெஷல் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் அதன் போட்டியாளர்கள் என்னென்ன பிளான்களை வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம். ஜியோவின் முதன்மை போட்டியாளராக இருப்பது  ஏர்டெல்தான்.



ஏர்டெல்



ஏர்டெல்



ஏர்டெல் போஸ்ட்பெயிடில்  அடிப்படை பிளான் 399 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 20 ஜிபி 3G மற்றும் 4G டேட்டாவைப் பெற முடியும். லோக்கல்,  STD கால்கள் அனைத்தும் இலவசம். ஒரு மாதத்துக்கு 100  SMS-களை இலவசமாக அனுப்பிக்கொள்ளலாம்.  Wynk Music மற்றும் ஏர்டெல் டிவியின் ப்ரீமியம் ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்டெர்நேஷனல் ரோமிங்கை மாதத்திற்கு ரூ.149-க்கு பயன்படுத்த முடியும். பயன்படுத்தாத மீத டேட்டாவை சேர்த்து அடுத்த மாதத்தில் பயன்படுத்தலாம்.



வோடோபோன்  RED போஸ்ட்பெயிட் பிளானை 399 ரூபாய்க்குத் தருகிறது.இதன் மூலமாக  SMS தவிர்த்து மற்ற சேவைகளை ஏர்டெல் தரும் சேவைகளைப் போலவே பெற முடியும். Vodafone Play சேவையை ஒரு வருடத்துக்குப் பயன்படுத்த முடியும். இன்டெர்நேஷனல் ரோமிங்கை மாதத்திற்கு ரூ.149-க்குப் பயன்படுத்த முடியும்.



ஐடியா



ஐடியா



அடுத்ததாக ஐடியாவும் மற்ற நிறுவனங்கள் தரும் டேட்டா, ரோமிங், காலிங் போன்ற சேவைகளை Nirvana என்ற பிளானில் 389 ரூபாய்க்குத் கொடுக்கிறது. 20 ஜிபி 3G மற்றும் 4G டேட்டாவை ஐடியா கொடுத்தாலும் பெரும்பாலான இடங்களில் 4G வசதியைப் பயன்படுத்த முடியாது. இது தவிர  தினமும் 100  SMS-களை இலவசமாக அனுப்பிக்கொள்ளலாம்.



ஜியோ



இவற்றில் இருக்கும் குறைகளையெல்லாம் ஆராய்ந்த பிறகுதான் ஜியோ தனது பிளானை அறிமுகப்படுத்தியிருக்கிறது. முதலில் மற்றவர்களின் அடிப்படை பிளான்கள் முந்நூறு ரூபாய்க்கும் அதிகமான விலையில் இருக்க ஜியோ 199-க்கு தருகிறது. 25 ஜிபி 4G டேட்டாவை பெற முடியும் அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு ஜிபிக்கும் விலை 20 ரூபாய். லோக்கல்,  STD, ரோமிங் என அனைத்துக் கால்களும் இலவசம். SMS ஒரு மாதத்துக்கு அன்லிமிடெட்டாக அனுப்பலாம். இன்டெர்நேஷனல் ரோமிங் இலவசம் என்று அறிவித்திருக்கிறது ஜியோ. இந்த பிளான் மூலமாக ஜியோவின் மற்ற சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். சில ISD களுக்கு 50 p விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவற்றோடு ஒப்பிடும்பொழுது விலை மிகவும் குறைவாகும். இது தவிர மேலும் பல போஸ்ட்பெய்டு பிளான்களை அறிமுகப்படுத்தவுள்ளது ஜியோ. இன்று முதல் ஜியோவின் இந்தப் புதிய பிளானை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages