[ad_1]
31 மே, 2018 - 15:16 IST
ஜெண்டில்மேன் படம் தொடங்கி ஐ வரை ஷங்கர் இயக்கிய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைப்பாளர். அந்நியன், நண்பன் படங்களுக்கு மட்டும் ஏ.ஆர்.ரகுமான் பிசியாக இருந்ததால் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.
தற்போது மூன்றாவது முறையாக ஏ.ஆர்.ரகுமான் இல்லாமல் வேறு ஒரு இசையமைப்பாளர் உடன் பணியாற்ற இருக்கிறார் ஷங்கர். ஷங்கர் இப்போது இயக்கி வரும் '2.0' படம் வெளியானதும் 'இந்தியன்-2' படத்தின் வேலைகளை துவங்க திட்டமிட்டிருக்கிறார்.
இந்தியன்- 2 படத்திற்கு அனிருத் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கோலமாவு கோகிலா படத்துக்கு அனிருத் இசையமைத்த பாடல் குறித்த சர்ச்சை எழுந்ததை அடுத்து, இந்தியன்- 2 படத்தின் இசையில் கவனமாக இருக்கும்படி அனிருத்திடம் கேட்டுக் கொண்டாராம் ஷங்கர். அதாவது ஒரிஜினலான இசை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு இசை அமைக்கும் அனிருத், இந்தியன்-2 படத்தின் மூலம் கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு முதன் முதலாக இசையமைக்கவிருக்கிறார்.
ரஜினி, கமல் ஆகியோர் நடிக்கும் படங்களுக்கு ஒரே நேரத்தில் பணிபுரியும் வாய்ப்பு அனிருத்துக்குக் கிடைத்துள்ளது.
[ad_2]
Source link
அனிருத்திடம் ஷங்கர் கேட்டது என்ன?

No comments:
Post a Comment