12/21/2017 12:25:43 PM
மென் இன் பிளாக், இன்டிபென்டன்ஸ் டே, ஐ.ரோபாட், ஆப்டர் எர்த் உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் வில் ஸ்மித். இவர் நடித்துள்ள ‘பிரைட்’ பட முன்னோட்ட காட்சிக்காக மும்பை வந்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறினார்கள். பிறகு வில் ஸ்மித் பேசியது: இந்திய வரலாறு, கலாச்சாரம். பண்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும். ஏற்கனவே ஒரு சிலமுறை நான் இந்தியாவிற்கு வந்திருக்கிறேன். பகவத் கீதை நான் விரும்பி படித்து வருகிறேன். இதுவரை 90 சதவீதம் படித்து முடித்திருக்கிறேன். தொடர்ந்து படித்து வருகிறேன்.
அதில் இடம்பெறும் அர்ஜூனன் கதாபாத்திரம் என் மனதில் பதிந்திருக்கிறார். அடுத்த முறை நான் இந்தியா வரும்போது ரிஷிகேஷ் செல்ல இருக்கிறேன். அங்கு நீண்ட நாட்கள் தங்கவும் எண்ணி உள்ளேன். இவ்வாறு வில் ஸ்மித் பேசினார். ரஜினி அடிக்கடி ரிஷிகேஷ் சென்று தியானத்தில் ஈடுபடுவதுண்டு. அதேபோல் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் ரிஷிகேஷ் செல்ல விருப்பம் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment