சூரி வீட்டு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்
16 மே, 2018 - 13:57 IST
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் - சூரி காம்பினேசன் பெரிய அளவில் ஒர்க் அவுட்டானது. அதையடுத்து ரஜினி முருகனிலும் இணைந்து நடித்த அவர்கள், இப்போது அதே பொன்ராம் இயக்கி வரும் சீமராஜா படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரையிலுள்ள சூரியின் வீட்டில் அவரது மகன் மற்றும் மகளுக்கு காது குத்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். இதேப்போன்று நடிகர் விமல் உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment