அமிதாப்பச்சன் இடத்தில் மோகன்லால் ?
14 மே, 2018 - 18:38 IST
இந்தியத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சன் இதுவரை தமிழ்ப் படங்களில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் கூட நடித்தது கிடையாது.
முதல் முறையாக தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துக் கொண்டிருக்கும் 'சை ரா' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப்பச்சனிடம் கடந்த சில மாதங்களாகப் பேசி வந்தனர்.
ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க அமிதாப்பச்சன் மறுத்துவிட்டார் போலிருக்கிறது. படத்தில் மிகவும் வலுவான கதாபாத்திரமான அதில் வேறு யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என யோசித்தவர்களுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஞாபகம் வந்திருக்கிறது. அவரை அணுகி படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் நடிக்க சம்மதித்துவிட்டார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்து 1994ம் ஆண்டு வெளிவந்த 'தேன்மாவின் கொம்பத்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் கே.வி.ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை கே.வி.ஆனந்த் பெற்றார். அந்தப் படம்தான் பின்னர் ரஜினிகாந்த் நடிக்க 'முத்து' படமாக தமிழிலும் வெளிவந்து வசூல் சாதனை படைத்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மோகன்லால் - கே.வி.ஆனந்த் மீண்டும் இணைய உள்ளனர்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment