பைரசிகளுடன் தொடர்பா: லைகா மறுப்பு
14 மே, 2018 - 18:04 IST
தமிழ் சினிமாவிற்கு தலைவலியாக இருப்பது, ஆன்லைன் பைரசி இணையதளங்களான தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன். இதைத் தடுப்பதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் முயற்சிகள் எடுத்ததாக கூறினார்.
இந்நிலையில், இந்த இணையதளங்களை நடத்துவது சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா என்பதும், விஷாலுக்கு இது தெரிந்தும் லைகா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அந்த நிறுவனத்திலேயே நடிப்பதாகவும் நேற்று சில தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு லைகா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "லைகா நிறுவனம் ஆன்லைன் பைரசியை ஊக்கப்படுத்துவதாக வந்த செய்தி ஆதாரமற்றது.
லைகா நிறுவனத்திற்கு எதிராக கட்டுரை வெளியிட்ட அந்த இணையதளம் மற்றும் அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். திரையுலகிற்கு எல்லா விதத்திலும் நாங்கள் ஆதரவாக இருந்துள்ளோம் என்று கூறியுள்ளது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment