அட... நம்ம மார்க்கும் ஃபேஸ்புக்லதான் லவ் பண்ணிருக்காரு! #HBDMarkZuckerberg - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 31, 2018

அட... நம்ம மார்க்கும் ஃபேஸ்புக்லதான் லவ் பண்ணிருக்காரு! #HBDMarkZuckerberg

[ad_1]

மோடியால் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆள முடியும்; ட்ரம்ப்பால் அமெரிக்கா போன்ற மிகப்பெரிய வல்லரசை ஆள முடியும்; ஆனால், அரசியல்வாதி அல்லாத ஒருவரால் உலகத்தையே ஆள முடியும் என்றால் நம்ப முடிகிறதா? முடியும் என்பதுதான் நிதர்சனம். மார்க் சக்கர்பெர்க் எனும் 34 வயது இளைஞன்தான், இன்று 220 கோடி மக்கள் வாழும் ஃபேஸ்புக் எனும் உலகின் முடிசூடா மன்னன். எல்லைகளைக் கடந்து இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே செல்கிறது மார்க்கின் விர்ச்சுவல் சாம்ராஜ்யம்!



ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரிக்குள் மற்ற மாணவர்களுடன் தொடர்புகொள்ள மார்க் ஆரம்பிக்க நினைத்ததுதான் ஃபேஸ்புக்.  ஆனால், அது ஒரு முழுக்க முழுக்க கல்லூரி அரட்டைகளுக்கானதாகதான் மார்க்கின் மனதில் இருந்தது. ஆனால், அப்போது சீனியர்கள் சிலருக்கு மார்க்தான் கோடிங் குரு. சீனியர்களின் ஐடியாவில் மார்க்கின் ஃபேஸ்புக் கோடிங் சேர்ந்துதான் அது பெரிய சமூக வலைதளமாக உருவானது. மார்க் சீனியர்களை ஏமாற்றிவிட்டார் என்பது எப்போதும் மார்க்கை சுற்றும் ஹார்வர்டு சர்ச்சை. ஆனால், அதையெல்லாம் சட்டரீதியாக உடைத்துதான் மார்க் ஃபேஸ்புக்கை ஆரம்பித்தார்.




மார்க் சக்கரபெர்க்



ஃபேஸ்புக் ஆரம்பிக்கும்போது, அது வெறும் நண்பர்களை இணைக்கும் தளம்தான். ஆனால், இன்று உலகையே ஒற்றைக் குடையின்கீழ் இணைக்கும் தளம். மார்க் சக்கர்பெர்க் வெறும் சமூக வலைதளம் மூலம் மக்களை இணைக்கவில்லை. மக்களின் சமூகத்தையும், உலகின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறார். பூகம்பமோ, இயற்கை சீற்றமோ, கலவரமோ மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதையும் இன்று மார்க் சொன்னால் சரியாக இருக்கும் என்று கூற வைத்திருக்கிறார்.



சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மார்க் சக்கர்பெர்க்குக்கு பட்டம் வழங்கியது அதில் பேசிய மார்க். ''நான் உங்களுடன் இன்று இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் செய்த சிலவற்றை என்னால் செய்ய முடியவில்லை. இன்று இந்த உரையை நான் வெற்றிகரமாக முடித்தால் ஹார்வர்டில் நான் ஒரு விஷயத்தை ஒழுங்காக முடித்திருக்கிறேன் என்று சொல்லலாம். நான் கேலி இணையதளமான ஃபேஸ்மேஷை ஹார்வர்டில் தான் வடிவமைத்தேன். பல்கலைக்கழக நிர்வாகம் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியது. நான் வெளியேற்றப்படுவேன் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். அந்த சமயம், என் நண்பர்கள் என்னை பார்ட்டிக்கு அழைக்கிறார்கள். அது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்; அந்த பார்ட்டியில்தான் பிரிசில்லாவை சந்தித்தேன். முதலில் பாத்ரூமுக்குச் செல்லும் வரிசையில் பிரிசில்லாவைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் கூறியது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. மூன்று நாள்களில் என்னை கல்லூரியைவிட்டு அனுப்பிவிடுவார்கள். நாம் உடனடியாக டேட்டிங் செல்வோம் என்று கூறினேன். இப்போது யார் வேண்டுமானாலும் இங்கு அந்த வரிகளைப் பயன்படுத்தலாம். ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கெல்லாம்? ஃபேஸ்மேஷ்தான் ஃபேஸ்புக் சாம்ராஜ்யம் உருவாகக் காரணம். ஃபேஸ்மேஷ் இல்லாமல் பிரிசில்லாவை கண்டுபிடித்திருக்க மாட்டேன். பிரிசில்லா என் வாழ்வில் மிகவும் முக்கியமானவள். இங்கு என் நாள்களை கட்டமைத்ததில் அவளது பங்கு அதிகம்'' என்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். தன் சாதனைகள் அத்தனைக்கும் காதலையே காரணமாகவும் சொன்னார்.



மார்க் சக்கர்பெர்க்



ஒரு பக்கம் இப்படி எமோஷனாலாக இருந்தாலும். இன்னோரு பக்கம் மார்க் கோபக்காரர். 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை என்றதும், "என்னங்க சார் உங்க சட்டம்?"னு ட்ரம்பை நேரடியாகத் தாக்கினார். சிரியாவில் அமெரிக்கா ஆயுதத் தாக்குதல் நடத்தியபோது, "இன்றுதான் முதல் உலகப்போர் துவங்கியது" என நினைவுகூர்ந்து இனி போரில்லா உலகம் படைப்போம் என்றும் ட்ரம்பை விளாசினார். ஒரு கட்டத்தில் ட்ரம்ப் கோபத்தின் உச்சத்துக்கே சென்று ஆன்டி - ட்ரம்ப் மனநிலையில் இருந்து மாறுங்கள் என்று மார்க்கை தாக்கினார்.



வருடாவருடம் இவர் எடுக்கும் நியூ இயர் ரெசல்யூசன் எல்லாம் மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக்கியுள்ளன. 2015-ல் கல்விக்கு `இயர் ஆஃப் புக்ஸ்'  என்றால், 2016-ல் ஆரோக்கியத்துக்கு `இயர் ஆஃப் ரன்னிங்'கை கையில் எடுத்தார் மார்க். 



`ஒரு வருடத்தில் 365 மைல் ஓடுவேன்' எனச் சபதம் எடுத்து ஓடி முடித்தார். அவர் ஓடியது வெறும் அமெரிக்க வீதிகளில் மட்டும் அல்ல, உலகம் எங்கும் ஓடினார். இந்தியா, சீனா, ஐரோப்பா, ஜப்பான் எனத் தொழில்நுட்பரீதியாக வளர்ந்த நாடுகளில் மார்க் கால்கள் பதிந்தன. சிரியா போன்ற மக்கள் ஆதரவின்றித் தவிக்கும் நாடுகளிலும் ஓடினார். இது அமெரிக்கர்கள் மத்தியில் மார்க்கின் பிம்பத்தை ஓர் அக்கறையான நல்ல இளைஞனாகப் பதிவுசெய்தது. 2017-ல் அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கும் சென்று மக்கள் குறை கேட்பேன் என்றார். ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் மார்க் பயணம் செய்து மக்கள் பிரச்னைகளைப் பேசினார். கிட்டத்தட்ட அமெரிக்காவின் அறிவிக்கப்படாத அதிபராகவே செயல்பட்டார்.



மார்க்



இத்தனை ஆண்டுகளும் வசந்தம் வந்துவீசிய மார்க்கின் வாழ்க்கை மீது யார் கண் பட்டதோ... தெரியவில்லை. இந்த ஆண்டு அடுக்கடுக்கான பிரச்னைகளைச் சந்தித்தது ஃபேஸ்புக். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை, அமெரிக்க தேர்தலுக்காகப் பயன்படுத்தியது வெளியே தெரியவே உலகெங்கும் உருண்டது மார்க்கின் தலை. அரசியல் சார்ந்த பிரச்னை என்பதால், மார்க்கே நேரில் சென்று விளக்கமளிக்க வேண்டிய அளவுக்கு விஷயம் சீரியஸானது. அமெரிக்க செனட் சபை சரமாரி கேள்விகளால் மார்க்கை துளைத்தெடுத்தது. அதில் ஒரு கேள்வி மார்க்கின் சாம்ராஜ்ஜியத்தை லேசாக ஆட்டம் காணவைத்தது. 



நேற்று இரவு உங்கள் மெசஞ்சரில் உங்கள் நண்பரிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்பதை கூற முடியுமா என்று செனட் சபை கேட்டது.



இல்லை... என்று சிரித்துக்கொண்டே பதில் தந்தார் மார்க்.



"நீங்கள் பாதுகாக்கும் ப்ரைவஸியை ஃபேஸ்புக் பயன்பட்டாளர்களுக்கு நீங்கள் தரவில்லையே? உங்கள் வர்த்தகத்துக்காக அவர்கள் ப்ரைவஸியை விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறீர்களே?" என்றனர்.



எல்லா கேள்விகளும் இப்படியே செல்ல கொஞ்சம் ஆடிப்போனார் மார்க்.



மகளுக்கு பிறந்தாள் கடிதம் எழுதுகிறார். அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார். உணர்வுகளைப் பிரதிபலிக்க வைக்கிறார். ஆனால், இது எல்லாவற்றிலும் வர்த்தகம் பார்க்கிறார் மார்க் என்பது தற்போதுள்ள சூழல். மக்களின் டேட்டா, அவர்களின் பிரைவசி எல்லாவற்றையும் காசாக்குவதுதான் ஃபேஸ்புக்கின் பிசினஸ் மாடல் என்றால், அறம் என்ற ஒன்றுக்கே அங்கே இடம் கிடையாதா என்பதுதான், உலகின் ஒட்டுமொத்த ஃபேஸ்புக் பயனாளர்களின் கேள்வி. பிரச்னைகள் எல்லாம் கூடிய விரைவில் சரியாகிவிடும் எனச் சொல்லியிருக்கிறார் மார்க். இது பிரச்னையை சரிசெய்யும் வழியா அல்லது பிரச்னையை மறைக்கும் வழியா என்பதுதான் நம் முன்னாள் இருக்கும் கேள்வி. விடை மார்க்கிற்கு மட்டுமே தெரியும்.



மார்க் சக்கர்பெர்க் என்ற நபர் ஃபேஸ்புக் என்ற ஒன்றை உருவாக்காவிட்டால் சிரியாவின் அய்லான் பெட்டிசெய்தியாகவே முடிந்திருக்கலாம். ஜல்லிக்கட்டுப் போராட்டம் இவ்வளவு வீரியம் பெற்றிருக்காது. நெடுவாசலும், நியூட்ரினோவும் அந்தந்தப் பகுதி மக்களின் போராட்டங்களாகவே முடிந்திருக்கலாம்; இந்த நல்ல விஷயங்களுக்கெல்லாம் ஓர் ஊடகத்தை உருவாக்கியதற்காக மார்க்கை  நிச்சயம் பாராட்டலாம்; அப்படியே, இன்று ஹேப்பி பர்த்டேவும் சொல்லலாம். ஃபேஸ்புக் பயனாளர்களின் பிரச்னைகளை எல்லாம் அடுத்த வருடத்திற்குள் முழுமையாகச் சரிசெய்துவிட்டால், மார்க்கிற்கு லைக் என்ன...? லவ்வே போடலாம்! #HBDMarkZuckerberg



[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages