4/13/2018 10:32:43 AM
இனவெறி என்பது உலகம் முழுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும் அந்த பாகுபாடு இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் பிரபல நடிகை ஒருவருக்கு நடந்திருக்கிறது.
தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவரை புதியபடமொன்றுக்கு ஒப்பந்தம் செய்ய ஹாலிவுட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.
பின்னர் அவரது தோல் நிறத்தை காரணம் காட்டி வாய்ப்பை நிராகரித்திருக்கிறது. இதுபற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது,’கடந்த ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. சினிமா ஸ்டுடியோவிலிருந்து ஒருவர் எனது மேனேஜரை தொடர்பு கொண்டு பிரியங்காவின் தவறான உடற்தகுதியால் எங்கள் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை என்று கூறியிருக்கிறார். அது என்னிடம் தெரிவிக்கப்பட்டது. மாநிறம் அல்லாத சிவப்பான ஒரு நடிகையை அவர்கள் தேடியிருப்பார்கள் என்று நான் நினைத்துக்கொண்டேன்.
ஆனாலும் அவர்கள் என்னை நிராகரித்ததற்காக சொன்ன காரணம் என் மனதை பாதித்தது’ என்றார். பிரியங்கா சோப்ராவின் கச்சிதமான கவர்ச்சி தோற்றம் மற்றும் பளபள நிறத்துக்காகவே அவருக்கு பாலிவுட்டில் கைநிறைய படங்களும், விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் வருகிறது. ஆனால் அவரது தோற்றத்தை காரணம் காட்டி ஹாலிவுட் நிறுவனம் பிரியங்காவை படத்திலிருந்து நிராகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment