ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! - 1000GB டேட்டா பிளான் நீட்டிப்பு - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! - 1000GB டேட்டா பிளான் நீட்டிப்பு

[ad_1]





பிராட்பேண்ட் திட்டத்தில் இலவசமாக 1000GB டேட்டா வழங்கி வந்ததை ஏர்டெல் நிறுவனம் தற்போது நீட்டித்துள்ளது.



ஏர்டெல்




கடந்த வருடம் ஏர்டெல் நிறுவனம், பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 1000GB இலவச டேட்டா சேவை அறிவித்திருந்தது. இந்தச் சேவையை ஒரு வருடம் வரையிலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறியிருந்தது. இந்நிலையில் இந்தத் திட்டம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் இதை வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிப்பு செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.



முன்னதாக இந்திய அளவில் டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனம் மிகப் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. ஆனால், ஜியோவின்

வருகைக்குப் பிறகு, மற்ற டெலிகாம் நிறுவனங்களின் மார்கெட் சரியத் தொடங்கியது. ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க வந்த உடனேயே பல இலவச அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் பலகோடிக்கணக்கான மக்கள் ஜியோவை பின் தொடரத் தொடங்கினர். இதற்கு இணையாக மற்ற நிறுவனங்களும் இலவசத் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கின. ஆனால், ஜியோவின் சலுகைகளுக்கு முன்னால் எந்த நிறுவனத்தாலும் நீண்ட நாள்கள் நிற்க முடியவில்லை. 



ஜியோவுடன் போட்டிப்போட களத்தில் குதித்தது ஏர்டெல் நிறுவனம். கடந்த வருடம் தங்களின் அனைத்து பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கும் 1000GB இலவச டேட்டா அறிவித்தது. இதை தற்போது நீட்டித்து வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். மேலும், இந்தத் திட்டத்தில் டேட்டா ரோல்ஓவர் (Data Rollover) என்ற திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு மாதத்துக்கான டேட்டா தீரவில்லையெனில், அதை அடுத்த மாதத்துக்கு மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.



இதைத் தொடர்ந்து ஏர்டெல்லின் 2 வி ஃபைபர் திட்டங்கள் ரூ.1,099 மற்றும் ரூ.1,299 ஆகியவற்றில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் இலவசமாக 1000GB டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள மை ஏர்டெல் ஆப்பில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும், இந்தத் திட்டத்தில் புதிதாக இணைய விரும்புபவர்கள் ஏர்டெல்லின் அதிகரபூர்வ இணையதளத்தில் சென்று தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்





[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages