5/16/2018 5:02:31 PM
1970, 80களில் டிஸ்கோ நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. உடலை வளைத்து நெளித்து வேகமாக ஆடும் அவரது நடன அசைவுகளுக்காகவே அவரது படங்கள் ஹிட்டாக அமைந்தன. தற்போது அவருக்கு 65 வயது ஆகிறது. குணசித்ர வேடங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு தமிழில் ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்திலும் மிதுன் சக்ரவர்த்தி நடித்திருந்தார். முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு ‘லக் பேக்’ இந்தி படத்தில் நடித்தார். ஹெலிகாப்டரிலிருந்து குதிக்கும் காட்சி ஒன்றில் அவர் நடித்தபோது டைமிங் மிஸ் ஆனதில் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. அன்றுமுதல் அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அமெரிக்கா சென்று மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று திரும்பினார். தற்போது மீண்டும் அவர் முதுகுவலியால் அவதிப்படுகிறார்.
நேற்று முன்தினம் தாங்கமுடியாத அளவுக்கு வலி ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் மிதுன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மாதக்கணக்கில் ஓய்வில் இருக்கவேண்டும் என்று மிதுனுக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்கியிருக்கின்றனர். மிதுன்சக்ரவர்த்தி பாராளுமன்ற மேல்சபை எம்பியாக இருந்தார். முதுகுவலி காரணமாக அப்பதவியை ராஜினமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment