5/8/2018 2:11:23 PM
நடிகை ஜான்வி தனது தாயும், நடிகையுமான ஸ்ரீதேவியை இழந்து வாடுவதுபோல் மற்றொரு மகள் குஷியும் துயரத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். போனி கபூர் எங்கு சென்றாலும் தனது மனைவி ஸ்ரீதேவியை அழைத்துச் செல்வார். பிரபல நடிகையாக இருந்தபோதிலும் கணவரின் அன்புக்கு கட்டுப்பட்டவராக இருந்த ஸ்ரீதேவி அவர் மீது மிகுந்த அக்கறையும் எடுத்துக்கொள்வார். விழாக்களுக்கு செல்லும்போது போனிகபூருக்கு வியர்க்கும் சமயத்தில் அதை ஸ்ரீதேவியே பந்தா எதுவும் பாராமல் தனது கைக்குட்டையால் துடைத்துவிடுவார்.
மறைந்த ஸ்ரீதேவிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் மரணம் அடைந்துவிட்டதால் அந்த விருதை மகள் ஜான்வி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் போனிகபூரும் ஜான்வியுடன் பங்கேற்றார். வெப்ப சூழலால் போனிகபூருக்கு நெற்றியில் வியர்த்தது. அதை கவனித்த ஜான்வி உடனடியாக தனது கையிலிருந்து கைக்குட்டையால் போனிகபூரின் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்து விட்டார்.
இக்காட்சியை போட்டோ எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டனர். அதைக்கண்ட ரசிகர்கள் போனிகபூருக்கு ஸ்ரீதேவி வியர்வையை துடைத்துவிடும் புகைப் படத்தையும், ஜான்வி போனிகபூருக்கு வியர்வையை துடைத்துவிடும் படத்தையும் ஒப்பிட்டு இணைய தளத்தில் வெளியிட்டு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment